தமிழக வெள்ள நிவாரணத்துக்கு எம்.பி. தொகுதி மேம்பாட்டிலிருந்து ரூ.1 கோடி வழங்க மத்திய அரசு ஒப்புதல்
சென்னை: தமிழகத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளுக்கு நிவாரண உதவிகளை மேற்கொள்ள நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டிலிருந்து ரூ.1 கோடி வரை ஒதுக்குவதற்கு மத்திய அரசு அனுமதியளித்துள்ளதாக முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை:
நாடாளுமன்ற உறுப்பினர் உள்ளுர் தொகுதி மேம்பாட்டுத் திட்ட நிதியிலிருந்து சீரமமைப்பு மற்றும் மறுவாழ்வுப் பணிகளுக்காக 1 கோடி ரூபாய் வரையிலான பணிகளை வெள்ள பாதிப்பு ஏற்பட்ட மாவட்டங்களில் மேற்கொள்ள பரிந்துரைக்கலாம் என நாடாளுமன்ற செயலகம் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

இது குறித்து ஒப்புதல் கடிதங்களை மத்திய புள்ளியல் மற்றும் திட்ட செயலாக்க அமைச்சகத்திற்கு அனுப்பி வைக்கும்படி அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் தேவைப்படும் சீரமைப்பு மற்றும் மறுவாழ்வுப் பணிகள் குறித்த விவரங்களை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தெரிவிக்குமாறு தலைமைச் செயலருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த சீரமைப்பு மற்றும் மறுவாழ்வுப் பணிகளுக்காக அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவரவர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 1 கோடி ரூபாயை வழங்குமாறு முதல்வர் ஜெயலலிதா கேட்டுக் கொண்டுள்ளார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications