விழுப்புரத்தில் பற்றி எரிந்த பயணிகள் ரயில்... சதி திட்டம் காரணமா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

விழுப்புரம்: விழுப்புரம் ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பயணிகள் ரயிலில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தால் பரபரப்பு ஏற்பட்டது. பயணிகள் யாரும் இல்லாததால் உயிரிழப்பு அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இதில் சதி திட்டம் இருக்கிறதா என போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

விழுப்புரம் ரயில் நிலையத்தின் 3வது ரயில் மேடையில் காட்பாடி செல்லும் பயணிகள் ரயில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. தினமும் அதிகாலை 4.20 மணிக்கு ரயில் காட்பாடிக்கு புறப்படுவது வழக்கம்.

Passenger Train caught fire in Vilupuram station, railway police started probe.

இந்நிலையில் நள்ளிரவு 12.45 மணி அளவில் ரயிலின் கடைசி பெட்டிக்கு முன் உள்ள பெட்டியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. காற்றின் வேகம் அதிகம் இருந்ததால் மளமளவென பரவிய தீ, பெட்டி முழுக்க கொளுந்துவிட்டு எரிந்தது.

இதனால் ரயிலின் ஒரு பெட்டி முழுவதும் எரிந்து சேதமடைந்தது. தகவல் அறிந்ததும் விரைந்த தீயணைப்பு வீரர்கள், ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

இரவு நேரத்தில் பயணிகள் யாரும் அந்தப் பெட்டியில் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. மின்கசிவு ஏற்பட வாய்ப்பு இல்லாததால் சதிவேலை தான் காரணமாக இருக்கும் என சந்தேகிக்கப்படுகிறது.

இதனால் தீ விபத்து குறித்து ரயில்வே போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Passenger Train caught fire in Vilupuram station, railway police started probe.
Please Wait while comments are loading...