மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள பசுபதீஸ்வரர் சன்னதி மேற்கூரை இடிந்து விழுந்தது

Posted By:
Subscribe to Oneindia Tamil

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவில் வளாகத்தில் உள்ள பசுபதீஸ்வரர் சன்னதியின் மேற்கூரை இடிந்து விழுந்தது.

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் வளாகத்தில் கடந்த 2ம் தேதி இரவு தீ விபத்து ஏற்பட்டது. இதில் கோவில் வளாகத்தில் இருந்த 30க்கும் மேற்பட்ட கடைகள் சேதம் அடைந்தன.

Pasupatheeswarar Sannathi roof collapsed in Madurai

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படையினர் மணிக்கணக்கில் போராடி தீயை அணைத்தனர். கோவில் வளாகத்தில் தீ விபத்து ஏற்பட்டதை நினைத்து மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

இந்நிலையில் தீ விபத்தில் சேதமடைந்த பசுபதீஸ்வரர் சன்னதியின் மேற்கூரை நேற்று இரவு இடிந்து விழுந்தது. இந்த சம்பவத்தால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தீ விபத்து சம்பவம் குறித்து விசாரணை நடந்து வரும் நிலையில் சன்னதி இடிந்து விழுந்துள்ளது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
The roof of Pasupatheeswarar sannathi in Meenakshi Amman Temple has collapsed on tuesday night. Devotees are already in worry about the fire accident in the world famous temple.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற