For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நீதிமன்றத் தீர்ப்பை அவமதிப்பதா? ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு பழநெடுமாறன் கண்டனம்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

Pazha Nedumaran condemns EVKS Elangovan
சேலம்: மறைந்த முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில், குற்றம்சாட்டப்பட்ட சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோருக்கு உடனடியாக தூக்குத் தண்டனையை நிறைவேற்ற வேண்டும் என்று கருத்து கூறியுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு, உலகத் தமிழர் பேரவையின் தலைவர் பழ.நெடுமாறன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய, அவர், சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோருக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை, உச்ச நீதிமன்றம் ஆயுள் தண்டனையாக குறைந்து விட்ட நிலையில், அவர்களுக்கான தூக்குத் தண்டனையை நிறைவேற்றச் சொல்வது, நீதிமன்றத்தை அவமதிக்கும் செயல் என்றும் குறிப்பிட்டார்.

நேற்று அறந்தாங்கியில் செய்தியாளர்களிடம் பேசிய ஈவிகேஎஸ் இளங்கோவன், ராஜீவ் காந்தியை கொன்றவர்களை விடுவிக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளது தவறு.

பிரதமராக இருந்தவரை கொலை செய்தவர்களை குற்றவாளிகள் என்று நீதிமன்றம் தெரிவித்த அந்த 3 பேரையும் தூக்கில் போட வேண்டும். இந்த விஷயத்தில் தீவிரவாதத்தை ஒழிக்க வேண்டும் என்ற முனைப்போடு மத்திய அரசு செயல்பட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். இதற்கு பழ.நெடுமாறன் தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.

English summary
Ulaka Tamil Peravai founder pazha nedumaran has condemned congress leader EVKS Elangovan.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X