பீர்க்கங்கரணை ஏரி நீர் வெளியேறியது.. மேற்கு தாம்பரம் சுற்றுப்பகுதிகளில் வெள்ளம்.. போக்குவரத்து கட்

Posted By:
Subscribe to Oneindia Tamil
ஸ்தம்பித்தது சென்னை.. பல மணி நேரமாக புரட்டி அடித்த பேய் மழை.. வீடியோ

சென்னை: ஏரியிலிருந்து வெளியேறிய நீரால் சென்னையின் தாம்பரம் ஏரியாவில் பல பகுதிகளில் சாலைகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.

நேற்று இரவு பெய்த கன மழையால், பீர்க்கன்கரணை ஏரியிலிருந்து நீர் வெளியேறியது. மழை நீராலும், ஏரி நீராலும் மேற்குதாம்பரம்,லட்சுமிபுரம்,முடிச்சூர் சாலை வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. மூன்றரை அடிக்கு மேல் சாலையில் தண்ணீர் தேங்கியுள்ளது.

Peerkankaranai lake water enter in to west Thambaram area

சுற்றுவட்டார பகுதிகளில் வீடுகளுக்குள்ளும் தண்ணீர் புகுந்துள்ளது. எனவே மேல் ஃப்ளோர்களுக்கு அவர்கள் குடி பெயர்ந்துவிட்டனர். இதனிடையே வெள்ளத்தால் வாகன போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளதால், இப்பகுதி மக்கள் பிற பகுதிகளுக்கு செல்ல முடியாமல் தவிக்கிறார்கள்.

இதனால் அங்குள்ள மக்கள் அவதிப்படுகிறார்கள். இதனிடையே சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் பகுதிகளில் மழை தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால், பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Peerkankaranai lake water enter in to west Thambaram area, people suffering lot.
Please Wait while comments are loading...