குமரி காய்கறி சந்தையில் தக்காளி வரத்து அதிகரிப்பால் விலை குறைவு - பொதுமக்கள் மகிழ்ச்சி
கன்னியாகுமரி காய்கறி சந்தையில் தக்காளி வரத்து அதிகரிப்பு விலை அதிக அளவு குறைந்துள்ளது.
கன்னியாகுமரி : நாகர்கோவில் மற்றும் கன்னியாகுமரி சுற்றுப்பகுதிகளில் உள்ள காய்கறிச் சந்தைக்கு தக்காளி வரத்து அதிகரித்து உள்ளதால் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
தமிழகத்தில் கார்த்திகை, மார்கழிக்கு பிறகு காய்கறி விலை உச்சத்தில் இருந்து படிப்படியாக குறைந்து வந்தது. குமரி மாவட்டத்தில் தற்போது காய்கறி விலை கட்டுக்குள் உள்ளது.

தற்போது கேரட் கிலோ ரூ.20, பூசனிக்காய் ரூ.24, தடியங்காய் ரூ.46, கோவக்காய் ரூ.40, பாகற்காய் ரூ.30 என விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் நாட்டு தக்காளி வரத்து அதிகரித்துள்ளதால் விலை கடுமையாக சரிந்துள்ளது.
கிலோ ரூ.5க்கு தற்போது நாட்டு தக்காளி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் பெங்களூரு தக்காளி கிலோ ரூ.18க்கு விற்பனை செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், குமரி சந்தைக்கு திசையன்விளை, காவல்கிணறு போன்ற பகுதிகளில் இருந்து நாட்டு தக்காளி வருகிறது. தற்போது தக்காளி உற்பத்தி அதிகரித்து வரத்தும் அதிகமாக இருப்பதால் விலை சரிவடைந்துள்ளது.
அதே நேரத்தில் நாட்டு தக்காளியை விட பெங்களூரு தக்காளி கூடுதல் நாட்கள் கெடாமல் இருப்பதால் பொது மக்கள் அதனை விரும்பி வாங்கி செல்கின்றனர். இதுவும் நாட்டு தக்காளி விலை சரிவுக்கு முக்கிய காரணம் என வருத்தம் தெரிவிக்கின்றனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications