விஜயகாந்த் ஆபிசுக்கே மீண்டும் நேரில் போய் ம.ந.கூ தலைவர்கள் ஆலோசனை
சென்னை: தொகுதி பங்கீடு, தேர்தல் பிரச்சாரம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசிப்பதற்காக, தேமுதிக தலைவர் விஜயகாந்த்தை அவரது கட்சி அலுவலகத்தில் மக்கள் நல கூட்டணி தலைவர்கள் இன்று சந்தித்து ஆலோசனை நடத்தினர்.
விஜயகாந்த்தின் தேமுதிக கட்சி, மக்கள் நல கூட்டணியுடன் கூட்டணி அமைத்து சட்டசபை தேர்தலில் போட்டியிடுகிறது.
விஜயகாந்த் கட்சிக்கு 124 தொகுதிகளும், மக்கள் நல கூட்டணிக்கு 110 தொகுதிகளும் ஒதுக்கீடு செய்து, ஒப்பந்தம் கையெழுத்தாகிவிட்டது.

இதனிடையே, விஜயகாந்த்தை, அவரது கோயம்பேடு அலுவலகத்தில் வைத்து, மக்கள் நல கூட்டணியிலுள்ள தலைவர்கள் திருமாவளவன், முத்தரசன், ஜி.ராமகிருஷ்ணன் ஆகியோர் சந்தித்து ஆலோசனை நடத்தினர்.

விவசாயிகள் பிரச்சினை, தேர்தல் பிரச்சாரம், எந்தெந்த கட்சிகள் எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுவது என்பது போன்ற விஷயங்கள் குறித்து தலைவர்கள் ஆலோசனை நடத்தினர்.

கூட்டணி உடன்பாடு ஏற்பட்டபோதும், தேமுதிக அலுவலகத்திற்குத்தான் மக்கள் நல கூட்டணி தலைவர்கள் சென்றிருந்தனர். இன்றைய ஆலோசனையின்போதும், ம.ந.கூ தலைவர்கள்தான் விஜயகாந்த்தை தேடி சென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒவ்வொரு முறையும் கிங்கை சந்திக்க கிங் மேக்கர்கள் தான் தேமுதிக அலுவலகத்துக்கு சென்று கொண்டுள்ளனர்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications