For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பெட்ரோல் விலை 100 ரூபாயைத் தொடும் அபாயம்.. இன்றைய பெட்ரோல், டீசல் நிலவரம் இதுதான்

சென்னையில் பெட்ரோல் 81.26 ரூபாய், டீசல் 73.03 ரூபாய்க்கும் இன்று விற்பனையாகி வருகிறது.

By Mohan Prabhaharan
Google Oneindia Tamil News

Recommended Video

    பெட்ரோல் டீசல் விலை உயர்வால் மக்கள் கடும் அதிருப்தி-வீடியோ

    சென்னை : சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 81.26 ரூபாய்க்கும், டீசல் 73.03 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது. விரைவில் பெட்ரோல் விலை 100 ரூபாயைத் தொடும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக மக்கள் கவலையடைந்துள்ளனர்.

    சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்க்கான விலை தொடர்ந்து அதிகரித்து வருவதாலும், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்து வருவதாலும் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்களின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

    Petrol and Diesel Rate marked new price in history

    மாதம் இரு முறை மாற்றப்பட்டு வந்த பெட்ரோல், டீசல் விலையை நாளுக்கு நாள் மாற்றி அமைத்துக்கொள்ள மத்திய அரசு உத்தரவிட்டதை தொடர்ந்து, கடந்த ஜூன் மாதத்தில் இருந்து எரிபொருள் விலை வரலாறு காணாத அளவு உயர்ந்துள்ளது. இது நாட்டின் பொருளாதாரத்தை விரைவில் பாதிக்கும் என்று வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

    கர்நாடக சட்டசபைத் தேர்தலுக்குப் பிறகு, பெட்ரோல் டீசல் விலை வரலாறு காணாத வேகத்தில் உயர்ந்து வருகிறது. இந்த விலையேற்றம் விரைவில் கட்டுப்படுத்தப்படும் என்று பெட்ரோலியத்துறை அமைச்சகம் தொடர்ந்து சொல்லியுள்ளது.

    இந்நிலையில்,சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு 15 காசுகள் உயர்ந்து 81.26 ரூபாய்க்கும், டீசல் 12 காசுகள் உயர்ந்து 73.03 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது. மும்பையில் ஒரு லிட்டர் பெட்ரோல் அதிகபட்சமாக 86.08 ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது.இதனால் விரைவில் பெட்ரோல் விலை 100 ரூபாயைத் தொடும் அபாயம் எழுந்துள்ளது.

    English summary
    Petrol and Diesel Rate at Chennai Today. The Price change on fuel by daily basis method from last year June increased fuel rates high .
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X