
"பன்றி வேட்டை".. கிழிந்த வாயுடன் பசுமாடு.. ஒரே ரத்தம்.. "குரூரரின்" அராஜகம்.. திகைத்த திருப்பத்தூர்
திருப்பத்தூர்: காட்டுக்குள் திடீரென வெடிவிபத்து ஏற்பட்டதுமே ஆடு மாடுகள் அலறி ஓடியுள்ளன.. என்ன நடந்தது திருப்பத்தூரில்?
வாயில்லா ஜீவனங்கள் உயிரிழப்புகள் இந்தியாவில் அதிகரித்தபடியே வருகின்றன... தெரிந்தும், தெரியாமலும், வேண்டுமென்றும் இதுபோன்ற அநியாய மரணங்கள் விலங்குகளுக்கு ஏற்பட்டு விடுகின்றன.
ஒருமுறை இமாச்சல பிரதேசம் பிலாஸ்பூர் மாவட்டத்தின் ஜன்துட்டா பகுதியில் ஒரு பசுவுக்கு வெடி வைத்துவிட்டனர்.. அந்த பசு ஒரு கர்ப்பிணி.. பசிக்காக தேடிவந்து அங்கிருந்த கோதுமை மாவை சாப்பிட்டுள்ளது.. அதை சாப்பிட்டதுமே பசுவின் வாய் வெடித்து ரத்தம் கொட்ட தொடங்கி உள்ளது.
போலீஸ் இல்லாத செக் போஸ்ட்.. வசூலில் குதித்த 'பசு காவலர்கள்'.. பாதிக்கப்படும் தமிழக வியாபாரிகள்! ஷாக்

சினை பசு
அதேபோல, நம் வேலூரில் சினை பசு ஒன்று, பசிக்காக புல்லை சாப்பிட வந்தபோது, வெடி குண்டு வெடித்ததில், அந்த பசுவின் வாய் சிதறிவிட்டது.. அதன் வாய் முழுதும் ரத்தம் கொட்டி சதை தொங்கியேவிட்டது.. சித்தூர் மாவட்டத்தில் பஞ்சனி என்னும் பகுதி உள்ளது.. இங்கு பசு மாடு ஒன்று மேய்ச்சலுக்காக வனப்பகுதிக்கு சென்றுள்ளது. அப்போது அங்கு இருந்த பொருளை சாப்பிட சென்றுள்ளது. அது வெடிகுண்டு என்று தெரியாமல் கடித்து விட்டது. இதில் அதன் வாய் பகுதி சிதைந்து கிழிந்து தொங்கிவிட்டது..

மேய்ச்சல்
சில மாதங்களுக்கு முன்பும், ஈரோட்டில் ஒரு சோக சம்பவம் நடந்தது. பவானிசாகர் அடுத்த பசுவபாளையத்தைச் சேர்ந்தவர் மல்லிராஜ்.. இவர் பசு மாடுகள், ஆடுகளை வளர்த்து வந்தார்... இவரது பசு மாடுகள், அதே பகுதியில் உள்ள காட்டு பகுதியில் மேய்ச்சலுக்கு செல்வது வழக்கம். அப்படித்தான், சம்பவத்தன்றும் சென்றன.. திடீரென வெடிச்சத்தம் கேட்டதுமே மல்லிராஜ், பதறிக் கொண்டு காட்டுக்குள் ஓடினார்.. அங்கே தன்னுடைய பசுமாட்டின் வாய் சிதைந்து ரத்தம் கொட்டி நின்றதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.. அந்த பகுதியில் நிறைய காட்டுப் பன்றிகள் நடமாடுகிறதாம்.. அவைகளை வேட்டையாடுவதற்காக யாரோ, மண்ணில் நாட்டு வெடிகுண்டுகளை புதைத்து வைத்துள்ளனர்.. அந்த வெடிகுண்டை மாடு தெரியாமல் கடித்துவிட்டது தெரியவந்தது..

காட்டு பன்றிகள்
இதோ இப்போதும் ஒரு சம்பவம் திருப்பத்தூர் மாவட்டத்தில் நடந்துள்ளது.. மரிமாணிக்ககுப்பம் நீலிக்கொல்லி பகுதியை சேர்ந்தவர் ராஜி.. 60 வயதாகிறது.. இவர் 3 பசு மாடுகள், 2 எருமை மாடுகளை வளர்த்து வருகிறார். இவர் எப்போதுமே, நீலிக்கொல்லி பகுதியில் உள்ள காட்டுப் பகுதியில், மாடுகளை அழைத்து சென்று மேய்ச்சலுக்கு விடுவாராம்.. அப்படித்தான் நேற்றும் மாடுகளை அழைத்து சென்றுள்ளார்.. ஆனால், அதே பகுதியை சேர்ந்த சில மர்ம நபர்கள், காட்டுப்பகுதியில் உள்ள காட்டுப் பன்றிகளை பிடிக்க, குண்டுகளை மண்ணில் புதைத்து வைத்துள்ளனர்.

சிதறிய வாய்
இந்த நாட்டு வெடிகுண்டுக்கு, வாய் வெடி என்றும் சொல்வார்கள்.. உணவு என்று நினைத்து மாடு கடித்தபோது, பலத்த சத்தத்துடன் வெடித்து, அதன் வாய் சிதறியது.. இப்படி ஒருமுறை அல்ல, பலமுறை இதுபோவே, மண்ணில் வாயை வைத்ததுமே நாட்டு வெடிகுண்டுகள் வெடித்துள்ளது.. இதில் மாட்டின் வாய் சிதறி கிழிந்து தொங்கியது.. ரத்தம் கொட்டியது.. உடனடியாக சிகிச்சைக்கு மாட்டினை அழைத்து சென்ற நிலையில், இதுகுறித்து, குரிசிலாப்பட்டு போலீசாரிடம் புகார் தரப்பட்டது.. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போலீசாரும் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த நாட்டு வெடிகுண்டு வைத்த மர்ம நபர் யார் என்று தெரியவில்லை.

காட்டு பன்றிகள்
ஆனால், காட்டுப் பகுதியில் உள்ள நிலத்தில் நாட்டு வெடிகுண்டுகளை யாரோ வைத்துவிட்டு போகிறார்களாம்.. தங்கள் ஆடு, மாடுகளை மேய்ச்சலுக்கு இந்த பகுதியில் மட்டுமே அழைத்து வர உள்ளதால், வெடிகுண்டு பீதி அதிகமாக உள்ளதாக அப்பகுதி மக்கள் கவலை தெரிவிக்கிறார்கள்.. காட்டு பன்றிகளை பிடிக்க நடவடிக்கை எடுத்தால், இப்படி வெடிகுண்டுகளை மண்ணில் புதைக்க வேண்டிய அவசியமும் நேரிடாது என்கிறார்கள் அந்த பகுதி மக்கள்.

நொறுங்கிடுதே
இதுபோன்ற எதிர்பாராத விபத்துக்களால் என்ன ஒரு கொடுமை என்றால், இந்த விபத்தில் சிக்கி கொள்ளும், பசுக்களும், ஆடுகளும், நிறைய அவதிக்கு உள்ளாகின்றன.. வாய் பகுதி முழுக்க வெடித்து சிதறிவிடுவதால், இவைகளால் எதையுமே நீண்ட நாட்களுக்கு ஒழுங்காக சாப்பிட முடியாத அளவுக்கு வாயை சுற்றி ரணங்கள் ஏற்பட்டுவிடுகின்றன.. தாகத்துக்கு தண்ணீர்கூட குடிக்க முடியாத கொடுமையும் வந்துவிடுகிறது.. உடனடி சிகிச்சைகள் தந்தாலும்கூட, வலி தாங்க முடியாமல் அந்த வாயில்லா ஜீவன்கள், இரவு நேரங்களில் கதறுவதை கேட்டாலே, நமக்கு இதயமே நொறுங்கிவிடுகிறது..!!