கதை திருட்டு விவகாரம்: காலா திரைப்படத்துக்கு தடை கோரி நீதிமன்றத்தில் வழக்கு- ரஞ்சித்துக்கு நோட்டீஸ்!
காலா திரைப்படத்தின் கதை மற்றும் டைட்டில் தன்னுடையது என்று உரிமை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ராஜசேகர் என்பவர் மனுதாக்கல் செய்துள்ளார்.
சென்னை: கதை திருட்டு விவகாரத்தில் காலா திரைப்படத்துக்கு தடை கோரி ராஜசேகர் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார்.
கபாலி படத்தை இயக்கிய பா. ரஞ்சித் இயக்கத்தில் மீண்டும் ரஜினிகாந்த் நடிக்கும் படம் காலா கரிகாலன். இது ரஜினியின் 164-ஆவது படம். இதன் படப்பிடிப்புகள் கடந்த 28-ஆம் தேதி மும்பையில் தொடங்கியது.
தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் தயாராகி வருகிறது. இப்படத்தின் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. இப்படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.

தலைப்புக்கு வரவேற்பு
படத்தின் தலைப்புக்கும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருக்கும ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்தது. இணையதளத்தில் வெளியான படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்களையும் ஏராளமானோர் கண்டுகளித்தனர். கரிகாலன் என்பது ரஜினிகாந்துக்கு பிடித்தமான பெயராகும்.

வாகனங்களில் ஸ்டிக்கர்
இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானதை தொடர்ந்து ரஜினிகாந்தின் இரு போஸ்களையும் ஸ்டிக்கர் அடித்து ரசிகர்கள் தங்கள் வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்டி அதகளப்படுத்தினர். இந்த படத்தில் ரஜினியோடு ஹியூமா குரேஷி, ஈஸ்வரிராவ், நானா படேகர், அஞ்சலி பாட்டீல், சமுத்திரக்கனி, சம்பத், ரவி கேளா, சாயாஜி ஷிண்டே உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள்.

கதை கரு என்னுடையதாக்கும்
ரஜினி நடிக்கும் காலா படத்திற்கு எதிராக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. காலா திரைப்படத்தின் தலைப்பு, கதைக் கரு தன்னுடையது என ராஜசேகர் என்பவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

பதிவு செய்த பெயர்தான் காலா
தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையில் 1996 -ஆம் ஆண்டே காலா பெயரை தான் பதிவு செய்திருப்பதாக ராஜசேகர் தனது புகாரில் தெரிவித்துள்ளார். மேலும் அப்படத்தின் கதையை ஏற்கெனவே இயக்குநர் ஒருவரிடம் தெரிவித்துள்ளதாகவும் குற்றம்சாட்டப்பட்டது.

நீதிமன்றத்தில் வழக்கு
இந்நிலையில் காலா படத்துக்கு தடை கோரி ராஜசேகர் , சென்னை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ராஜசேகரின் குற்றச்சாட்டு குறித்து ஜூன் 15-ஆம் தேதிக்குள் இயக்குநர் பா. ரஞ்சித்தும், தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையும் பதிலளிக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications