பிரதமரான பிறகு அரசு விழாவில் பங்கேற்க முதன்முறையாக இன்று சென்னை வருகிறார் மோடி
சென்னை : பிரதமரான பிறகு நரேந்திர மோடி முதல்முறையாக இன்று சென்னை வருகிறார். இன்று நடைபெறும் கைத்தறித் துறை விழாவில் அவர் பங்கேற்கிறார். இதையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
கைத்தறி நெசவாளர்கள் விழா சென்னை பல்கலைக் கழக வளாகத்தில் இன்று காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது. இதில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி தனி விமானம் மூலம் சென்னை வருகிறார்.

மத்திய அரசு நடத்தும் இந்த விழாவில் தென் மாநிலங்களைச் சேர்ந்த 3,000 நெசவாளர்கள் பங்கேற்கிறார்கள். இதில் தமிழகத்தைச் சேர்ந்த 1,000 நெசவாளர்களும் கலந்து கொள்கின்றனர்.
சிறந்த நெசவாளர்ளுக்கு விருதுகளும் வழங்கப்படுகின்றன. பொதுவாக இந்த விழா டெல்லியில் நடைபெறுவதுதான் வழக்கம். முதல் முறையாக இம்முறை சென்னையில் நடைபெறுகிறது.
பிரதமர் வருகையை முன்னிட்டு, அவரது பாதுகாப்பு அதிகாரிகள் சென்னைக்கு வந்து விமான நிலையம், நிகழ்ச்சி நடக்கும் சென்னை பல்கலைக்கழக வளாகம், பிரதமர் வந்து செல்லும் பாதை ஆகியவற்றை ஆய்வு செய்தனர். பிரதமர் செல்லும் பாதையில் நடக்கும் மெட்ரோ ரயில் பணிகள் இன்று மட்டும் நிறுத்தி வைக்கப்படுகின்றன.
பிரதமர் மோடி வருகையையொட்டி, சென்னை விமான நிலையம், சென்னை பல்கலைக் கழகம், மத்திய அரசின் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
நரேந்திர மோடி பிரதமராகப் பொறுப்பேற்ற பிறகு தமிழகத்தில் எந்த நிகழ்ச்சியிலும் அவர் பங்கேற்கவில்லை. பி.எஸ்.எல்.வி. சி-23 ராக்கெட் ஏவப்படுவதை நேரில் பார்ப்பதற்காக 2014 ஜூன் 29-ம் தேதி ஸ்ரீ ஹரிகோட்டா செல்லும் வழியில் சென்னை வந்த அவரை, முதல்வர் ஜெயலலிதா மற்றும் தமிழக பாஜக தலைவர்கள் விமான நிலையத்தில் சந்தித்து பேசினர். அதன் பிறகு அவர் தமிழகத்துக்கு வருகை தரவில்லை.
எனவே நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முதன்முறையாக சென்னைக்கு வருகை தரும் மோடிக்கு விமான நிலையத்தில் தமிழக பா.ஜ.க. வினர் சிறப்பான வரவேற்பு அளிக்க ஏற்பாடுகள் செய்துள்ளனர்.
-
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications