ஊழலை ஒழித்த பாஜகவுக்கு தமிழக மக்களே ஆதரவு தாருங்கள்: ஒசூரில் மோடி பேச்சு

Subscribe to Oneindia Tamil

ஒசூர்: தமிழக மக்கள் பாஜகவை வெற்றிபெறச் செய்தால், மத்திய அரசு கொண்டுவந்த நலத்திட்டங்கள், தமிழகத்திலும் உடனுக்குடன் நிறைவேற்றப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். மேலும் ஊழல் இல்லாத ஆட்சி என மத்திய அரசு பெயரெடுத்துள்ளதாகவும் பெருமிதம் தெரிவித்தார் அவர்.

PM Modi giving promises to Tamilnadu people

பாஜக வேட்பாளர்களை ஆதரித்து ஒசூரில் இன்று மாலை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மோடி கூறியதாவது:

  • வணக்கம் எனக்கூறி ஓசூரில் பிரசாரத்தை துவக்கினார் பிரதமர்
  • கடந்த ஆட்சியில் யூரியா வாங்குவதற்காக விவசாயிகள் தடியடிக்கு உள்ளாகி வந்தனர்
  • யூரியா விற்பனையில் நடந்து வந்த ஊழலை பாஜக அரசு ஒழித்தது
  • சமையல் எரிவாயுவிலும் காங்கிரஸ் ஆட்சி ஊழல் செய்து வந்தது
  • சமையல் எரிவாயு வழங்கிய வகையில் 21 ஆயிரம் கோடிக்கு ஊழல் நடந்தது
  • சமையல் காஸ் ஊழலை ஒழிப்பதற்காக மானியத்தை நேரடியாக வங்கி கணக்கில் செலுத்திவருகிறோம்
  • தமிழகத்தின் மூன்றாவது சக்தியாக பாஜக உருவெடுத்துள்ளது. திமுகவும், அதிமுகவும் வெட்கமே இல்லாமல் தொடர்ந்து ஊழல் செய்து வருகிறார்கள்.
  • சட்டசபை தேர்தல்களின்போதெல்லாம், தமிழக மக்கள் ஒருமுறை கிணற்றில் விழுவார்கள், இல்லையென்றால் ஏரியில் விழுவார்கள். ஏனெனில் அவர்களுக்கு வேறு வழியில்லாமல் இருந்தது. இம்முறை, பாஜக உங்களுக்காக ஒரு மாற்று சக்தியாக உருவாகி நிற்கிறது.
  • மத்தியில் பாஜக அரசு பொறுப்பேற்ற பிறகு, ஒவ்வொரு ஸ்க்ரூவாக டைட் செய்துவந்ததால் ஊழல் ஒழிக்கப்பட்டது
  • ஊழலை ஒழித்ததால்தான் என்மீது எதிர்க்கட்சிகளுக்கு கோபத்திலுள்ளனர்.
  • தமிழ் மக்களின் ஆதரவு இருக்கும்வரை எனக்கு பயம் இல்லை, பின்வாங்க மாட்டேன்
PM Modi giving promises to Tamilnadu people
  • கடந்த 2 ஆண்டுகளாக மத்திய பாஜக அரசு மீது எந்த ஊழல் புகாரும் இல்லை. 2ஜி ஊழலில் தமிழகத்தில் உள்ள யார் ஆட்டம் போட்டது என்பது உங்களுக்கு தெரியும். நாங்கள் 3ஜி, 4ஜி, டிஜிட்டல் இந்தியாவரை நாட்டை வளர்த்துள்ளோம். ஆனால் ஒரு ஊழல் புகாரும் எங்கள் மீது வந்தது கிடையாது.
  • ஹெலிகாப்டர் ஊழலில் ஈடுபட்டவர்கள் தண்டனை பெற்றுத்தந்தே தீர வேண்டும்
  • ஏழைகள் வங்கிகளுக்கு செல்ல முடியாத நிலையை மாற்றியுள்ளோம்
  • ஏழைகளுக்கு வங்கிகளின் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன
  • வெள்ளத்தால் தமிழகம் பாதிக்கப்பட்டபோது உடனே விமானத்தில் வந்து உதவி செய்தேன்
  • போண்டா, பக்கோடா விற்கும் சிறு வியாபாரிகளுக்கும் வங்கிக்கடன் கிடைக்க வழி செய்துள்ளோம்
  • கடந்த 4 மாதங்களில் 3.5 கோடி மக்களுக்கு, முத்ரா வங்கி திட்டத்தின் மூலம், ரூ.1 லட்சத்து 30 ஆயிரம் கோடி கடன் கொடுத்துள்ளோம்
  • காஸ் சிலிண்டர் மானியத்தை 1 கோடி பேர் விட்டுத் தந்துள்ளனர். அவர்களுக்கு நன்றி.
  • விறகு அடுப்பில் சமைப்பது 400 சிகரெட் புகையை உட்கொள்வதற்கு சமம்
  • எனவேதான் 5 கோடி தாய்மார்களுக்கு காஸ் இணைப்பு கொடுத்துள்ளோம்
  • தமிழக மக்கள் பாஜகவுக்கு ஆதரவு தர வேண்டும் என்று வேண்டுகிறேன்
  • பாஜக வெற்றி பெற்றால் டெல்லியில் நிறைவேற்றப்படும் திட்டம் உடனே தமிழகத்தில் நிறைவேறும்
  • தாமரை சின்னத்தில் வாக்களியுங்கள்
  • 'நன்றி' என்று தமிழில் கூறி பிரசாரத்தை நிறைவு செய்தார் மோடி
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+