For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சென்னை பட்டினப்பாக்கத்தில் மீனவக் குடியிருப்புகளை இடித்து தள்ளிய அதிகாரிகள்!

சென்னை பட்டினப்பாக்கத்தில் சாலை ஆக்கிரமிக்கப்பட்டிருப்பதாக கூறி ஏராளமான மீனவ மக்களின் வீடுகள் அகற்றப்பட்டுள்ளது.

By Siva
Google Oneindia Tamil News

சென்னை: சென்னை பட்டினப்பாக்கத்தில் சாலை ஆக்கிரமிக்கப்பட்டிருப்பதாக கூறி ஏராளமான மீனவ மக்களின் வீடுகள் அகற்றப்பட்டுள்ளது.

இதன் காரணமாக மீனவ மக்கள் அங்கு நடத்தி வந்த மின் கடைகள், அவர்கள் வாழ்ந்த வீடுகள் என பல பகுதிகள் இடித்து தரைமட்டமாக ஆக்கப்பட்டுள்ளது.

சென்னையின் பாட்டினப்பாக்கத்தில் உள்ள சில பகுதிகளும் ,சாலை ஓரத்தில் உள்ள சில இடங்களும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடுக்கப்பட்டது.

வழக்கு

வழக்கு

மேலும் விரைவில் அந்த இடத்தில் உள்ள சட்டத்திற்கு புறம்பான ஆக்கிரமிப்புகளை அகற்று வேண்டும் எனவும் மனுவில் கூறப்பட்டது. இந்த மனு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

 ஆட்சியர்கள் ஆஜர்

ஆட்சியர்கள் ஆஜர்

இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் , இந்தப் பிரச்சனை குறித்து 10 மாவட்ட ஆட்சியாளர்கள் பதில் அளிக்க வேண்டும் என் கூறியிருந்தது. இந்த வழக்கில் ஆஜராகாத ஆட்சியாளர்கள் மீது நீதிமன்ற அவதூறு வழக்கு தொடுக்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர் ஆனார்கள்.

 ஆக்கிரமிப்பு அகற்றம்

ஆக்கிரமிப்பு அகற்றம்

இதையடுத்து எங்கு ஆக்கிரமிப்புகள் இருந்தாலும் அதை உடனியாக் அகற்ற வேண்டும் என நீதிமன்றம் இந்த ஆட்சியாளர்களுக்கு உத்தரவிட்டது. இதையடுத்து பட்டினப்பாக்கத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி தொடங்கியது. நகராட்சி அதிகாரிகள் முன்னிலையில் இந்த பணி நடைபெற்றது.

 மீனவ குடும்பங்களுக்கு பாதிப்பு

மீனவ குடும்பங்களுக்கு பாதிப்பு

பலத்த போலீஸ் பாதுகாப்புடன், சாலை ஓரத்திலும், அரசு இடங்களிலும் இருந்த அனைத்து கட்டிடங்களும் இடிக்கப்பட்டது. இதன் காரணமாக ஏராளமான மீனவ மக்கள் அந்த இடத்தை காலி செய்து செல்ல வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.

English summary
Police demolished houses after court order in Pattinappakkam. Due to goverment land aggression case against fisher man people in pattinappakkam court order this statement.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X