தென்காசி போலீஸ் ஸ்டேஷனில் கொடியேற்றிய துப்புரவு ஊழியர்! அழைத்து கவுரவித்த இன்ஸ்பெக்டர்!
தென்காசி: தென்காசி காவல் நிலையத்தில் துப்புரவு பணி மேற்கொள்ளும் ஊழியரை தேசியக் கொடி ஏற்ற வைத்து கவுரவித்துள்ளார் காவல் ஆய்வாளர் பாலமுருகன்.
காவல் ஆய்வாளரின் இந்த செயலுக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுக்கள் குவிகின்றன. நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளை கடந்துவிட்ட போதும், இன்னும் பல்வேறு இடங்களில் தலித் ஊராட்சி மன்றத் தலைவர்கள் கொடியேற்ற முடியாத அவல நிலை தான் நீடிக்கிறது.

இது போன்ற சூழலில் துப்புரவு பணியாளரை தேசியக் கொடியை ஏற்ற வைத்து தமிழ்நாட்டையே தன்னை நோக்கி திரும்பி பார்க்க வைத்துள்ளார் இன்ஸ்பெக்டர் பாலமுருகன். தாம் ஏற்ற வேண்டிய கொடியை பரந்த மனதோடு பெருந்தன்மையாக பிறருக்கு விட்டுக்கொடுக்கவும் ஒரு மனம் வேண்டும்.
காவல் நிலையத்தில் போலீஸார் தனக்கு வழங்கிய ராஜ மரியாதையை கண்டு திக்குமுக்காடிவிட்டார் துப்புரவு பணியாளர். சமுதாயத்தில் நிலவும் ஏற்றத் தாழ்வுகளை களையும் வகையில் ஒவ்வொருவரும் பாலமுருகனை போன்று சமத்துவத்தை நிலை நாட்டும் முயற்சிகளை மேற்கொண்டால் பிரச்சனைகளுக்கே இடமிருக்காது.

இதனிடையே இதில் குறிப்பிட வேண்டிய விவகாரம் என்னவென்றால், வெறுமனே கொடியை மட்டும் ஏற்ற வைக்காமல் காவலர்களின் அரசு அணிவகுப்பு மரியாதையும் துப்புரவு ஊழியருக்கு வழங்கி கவுரவித்துள்ளார். தென்காசியில் நிகழ்ந்த இந்த நிகழ்வு சமூக வலைதளங்களில் அதிகமானோரால் பார்க்கப்பட்டு பாராட்டப்பட்டு பகிரப்படுகிறது.
-
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை












Click it and Unblock the Notifications