குண்டுவெடிப்பு எதிரொலி – சென்னையில் விடிய விடிய வாகன சோதனை
சென்னை: சென்னையின் முக்கிய இடங்களில் போலீசார் விடிய விடிய வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நிகழ்ந்த குண்டு வெடிப்பையடுத்து சென்னையின் முக்கிய இடங்களில் விடிய விடிய வாகன சோதனை நடைபெற்றது. இதற்காக, சென்னை முழுவதும் 15 ஆயிரம் காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

அவர்கள், அசோக்நகர், மவுண்ட் ரோடு, எக்மோர், அடையார், திருவான்மியூர், கோயம்பேடு உள்ளிட்ட இடங்களில் வாகன சோதனை நடத்தினர். சென்ட்ரல் ரயில் நிலையம், கோயம்பேடு பேருந்து நிலையம், சென்னை விமான நிலையம் உள்ளிட்ட இடங்களில் 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
ரயில் மற்றும் பேருந்து நிலையங்களில், பயணிப்பவர்களின் உடமைகள் முழுவதும் சோதிக்கப்பட்ட பின்னரே பயணிக்க அனுமதிக்கப்படுகின்றனர். மேலும், காவல் துறையினர் சி.சி.டி.வி கேமரா மூலமும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மண்ணடி, திருவல்லிக்கேணி, எம்.ஜி.ஆர். நகர், உள்ளிட்ட இடங்களில் ரோந்துப் பணியும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. காவல் துறையினருடன் தமிழ்நாடு ஊர்க்காவல் படை போலீசாரும் சோதனையில் ஈடுபட்டனர்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications