ஜாமீனில் வெளியே வர முடியாத பிரிவுகளின் கீழ் சசிகலா, எடப்பாடி பழனிச்சாமி மீது வழக்கு
அதிமுக எம்.எல்.ஏக்கள் கடத்தல் தொடர்பாக ஜாமீனில் வெளியே வர முடியாத பிரிவுகளின் கீழும் சசிகலா, எடப்பாடி பழனிச்சாமி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை: எம்.எல்.ஏக்களை கடத்தியது தொடர்பாக ஜாமீனில் வெளியே வர முடியாத பிரிவுகளின் கீழும் சசிகலா, எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்டோர் மீது கூவத்தூர் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
அதிமுக எம்.எல்.ஏக்களை கூவத்தூர் ரிசார்ட்டில் கடத்தி சிறை வைத்துள்ளது மன்னார்குடி கோஷ்டி. இந்த சிறையில் இருந்து தப்பி வந்தவர் மதுரை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. சரவணன்.

கூவத்தூர் ரிசார்ட்டில் இருந்து மாறுவேடத்தில் தப்பி வந்து முதல்வர் ஓபிஎஸ்ஸை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார் சரவணன். அத்துடன் தாம் கடத்தப்பட்டதாக டிஜிபியிடமும் புகார் கொடுத்தார் சரவணன்.
அவரது புகாரின் பேரின் சசிகலா, எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்டோர் மீது 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளது கூவத்தூர் போலீஸ். அதாவது ஐபிசி 342, 343, 365, 353, 506(1) ஆகிய பிரிவுகளின் கீழ் சசிகலா, எடப்பாடி பழனிச்சாமி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதில் ஐபிசி 343, 365, 353 ஆகியவை ஜாமீனில் வெளியே வர முடியாத பிரிவுகளாகும். சட்டவிரோதமாக அடைத்து வைத்தல், ரகசியமாக அடைத்து வைத்தல், அரசு ஊழியரைத் தாக்கி அவரது கடமையை கிரிமினல்கள் மூலம் தடுப்பது, கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் சசிகலா மற்றும் எடப்பாடி பழனிச்சாமி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
தற்போது இந்த புகாரின் அடிப்படையில் எடப்பாடி பழனிச்சாமியிடம் கூவத்தூர் ரிசார்ட்டில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications