போலி ஐடி அதிகாரியை வரவழைத்து நாடகமாடிய தீபா கணவர் மாதவன் தப்பி ஓடி தலைமறைவு!

Posted By:
Subscribe to Oneindia Tamil
  ஜெ.தீபா வீட்டுக்கு வந்த டுபாக்கூர் ஐடி அதிகாரி..வீடியோ

  சென்னை: தமது வீட்டில் போலி வருமான வரித்துறை அதிகாரியாக நடிக்க ஏற்பாடு செய்த தீபாவின் கணவர் மாதவன் போலீசில் சிக்காமல் இருக்க தலைமறைவாகிவிட்டார்.

  ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவின் தியாகராய நகர் வீட்டுக்குள் மித்தேஷ்குமா என்ற பெயரில் போலி வருமான வரித்துறை அதிகாரி ஒருவர் உள்ளே நுழைந்து பரபரப்பை கிளப்பினார். அவர் மீது சந்தேகமடைந்து போலீசார் விசாரணை நடத்திக் கொண்டிருக்கும் போதே சுவர் ஏறி குதித்து தப்பி ஓடினார்.

  இந்த மித்தேஷ்குமார் யார்? இவர் ஏன் வருமான வரித்துறை அதிகாரியாக நடித்தார்? தீபாவும் மாதவனும் பரபரப்புக்காக இப்படி செய்தார்களா? என பல்வேறு கேள்விகள் எழுந்திருந்தன. இந்த நிலையில் மித்தேஷ்குமார் என்கிற போலி அதிகாரி போலீசில் சரணடைந்தார்.

  மாதவனின் நாடகம்

  மாதவனின் நாடகம்

  அவர் கொடுத்த வாக்குமூலத்தில், தீபாவின் கணவர் மாதவன் கொடுத்த ஐடியா படிதான் தாம் செயல்பட்டதாக தெரிவித்திருந்தார். இந்த கோணத்தில்தான் போலீசாரும் விசாரணை நடத்தி வந்தனர்.

  தீபா மாதவனின் நாடகம்

  தீபா மாதவனின் நாடகம்

  ஏற்கனவே தம் வீட்டில் மர்ம நபர்கள் கல்லெறிந்துவிட்டதாக போலீசில் தீபா புகார் கொடுத்திருந்தார். ஆனால் தீபாவும் மாதவனும் தமது ஆதரவாளர்களை வைத்தே கல் எறிந்து நாடகமாடியது அம்பலமானது.

  போலி அதிகாரி வாக்குமூலம்

  போலி அதிகாரி வாக்குமூலம்

  இதனால் போலி வருமான வரித்துறை அதிகாரி விவகாரத்திலும் தீபா, மாதவன் மீது போலீசார் சந்தேகித்தனர். அவர்களது சந்தேகத்தின்படியே மாதவனே போலி ஐடி அதிகாரியை ஏற்பாடு செய்தது தெரியவந்துள்ளது.

  மாதவனை தேடும் போலீஸ்

  மாதவனை தேடும் போலீஸ்

  இதையடுத்து போலீசார் தம்மை கைது செய்வார்களோ என அஞ்சி மாதவன் தப்பி ஓடி தலைமறைவாகிவிட்டார். அவரைத்தேடுவதற்கு தனிப்படை போலீஸ் அமைக்கப்பட்டுள்ளது.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Chennai Police Team is searching Deepa's Husband Madhavan for Fake IT Raid Drama.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற