For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சஸ்பெண்ட் முடிந்து சட்டசபைக்கு வந்த ஸ்டாலின் காரை நிறுத்தி சோதனை போட்ட போலீஸ்!

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: ஒருவாரத்திற்குப் பின்னர் சட்டசபை நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் வாகனத்தை போலீசார் சோதனையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தலைமை செயலகம் முன் சாலையில் நிறுத்தி வாகனத்தை போலீசார் சோதனை செய்தனர்.

திமுக எம்.எல்.ஏக்களின் வாகனங்களையும் காவல்துறையினர் தனித்தனியாக சோதனையிட்ட பிறகே அனுமதித்தனர். அதிமுக உறுப்பினர்களின் வாகனங்களை போலீசார் சோதனை செய்யவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Police stops Stalin's vehicle and checks

•தமிழக சட்டசபை பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த மாதம் 21ம் தேதியன்று கூடியது. 2016-17-ஆம் ஆண்டிற்கான திருத்திய நிதிநிலை அறிக்கை அப்போது தாக்கல் செய்யப்பட்டது.

•பட்ஜெட் தாக்கலைத் தொடர்ந்து, பேரவை ஒத்திவைக்கப்பட்டு அதன் பின், 25ம் தேதி முதல் விவாதம் நடைபெற்றது. கடந்த மாதம் 29ம் தேதியன்று நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், திருத்திய நிதி அறிக்கை மீதான பதிலளித்துப் பேசினார்.

•ஆகஸ்ட் 1ம் தேதி முதல் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் செப்டம்பர் 2ம் தேதி வரை நடைபெறவுள்ளது.

•தமிழக சட்டசபையில் அமளியில் ஈடுபட்டதாக எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட திமுக உறுப்பினர்கள் 79 பேர், ஒரு வார காலத்திற்கு இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

•தலைமைச் செயலக வளாகத்தில், தர்ணா போராட்டம் மற்றும் போட்டி பேரவைக் கூட்டம் ஆகியவற்றை நடத்தி, திமுகவினர் பரபரப்பை ஏற்படுத்தினர்.

•ஒருவார காலம் சஸ்பெண்ட் நடவடிக்கை முடிவடைந்ததை தொடர்ந்து, திமுக எம்எல்ஏக்கள் உள்ளிட்டோரும் கூட்டத்தொடரில் பங்கேற்க இன்று சட்டசபைக்கு வந்தனர்.

•சட்டசபைக்கு வந்த எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் வாகனத்தை தலைமை செயலகம் முன் சாலையில் நிறுத்தி வாகனத்தை போலீசார் சோதனை செய்தனர்.

•திமுக சட்டமன்ற உறுப்பினர்களின் வாகனங்களையும் தனித்தனியாக சோதனையிட்ட பிறகே அனுமதித்தனர். அதிமுக உறுப்பினர்களின் வாகனங்களை போலீசார் சோதனை செய்யவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.

•போட்டி சட்டமன்ற நிகழ்வை நேரடியாக ஒளிபரப்பியதால் தலைமை செயலகத்தில் பத்திரிகையாளர்களுக்கும் கெடுபிடி விதிக்கப்பட்டுள்ளது. செய்தியாளர் அறைக்கு செல்லும் 4வது எண் நுழைவாயில் தொடர்ந்து மூடப்பட்டுள்ளது.

•நேற்றைவிட இன்று தலைமை செயலகம், சாலையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

English summary
Police stopped Opposition leader MK Stalin's car and had a check.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X