ஹாசினி கொலையாளி தஷ்வந்த் புழல் சிறையில் அடைப்பு.. கோர்ட் வளாகத்தில் பொதுமக்கள் கோஷம்
ஹாசினி கொலையாளி தஷ்வந்த் புழல் சிறையில் அடைக்கப்பட்டு இருக்கிறார்.
Subscribe to Oneindia Tamil
Recommended Video

நீதித்துறை மேல் நம்பிக்கை உள்ளது- ஹாசினியின் தந்தை- வீடியோ
சென்னை சிறுமி ஹாசினி கொலை வழக்கில் தஷ்வந்த் குற்றவாளி என உறுதி செய்த செங்கல்பட்டு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. தஷ்வந்திற்கு தூக்கு தண்டனை விதித்தது. 5 பிரிவுகளின் கீழ் குற்றங்கள் நிரூபிக்கப்பட்டுள்ளதாக நீதிபதி வேல்முருகன் கூறினார்.
இதனால் அந்த பிரிவுகளின் கீழும் 30 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் கொடுக்கப்பட்டது. அதுஇல்லாமல் இரண்டு பிரிவுகளின் கீழ் 15 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தற்போது ஹாசினி கொலையாளி தஷ்வந்த் புழல் சிறையில் அடைக்கப்பட்டு இருக்கிறார். கோர்ட்டிலிருந்து போலீஸ் பாதுகாப்புடன் புழல் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார் தஷ்வந்த். கோர்ட் வளாகத்தில் தஷ்வந்த்துக்கு எதிராக பொதுமக்கள் கோஷமிட்டனர்.












Click it and Unblock the Notifications