தமிழகத்தில் பாஜகவின் மானம் காத்த “எல்லைச்சாமி” பொன்.ரா!
கன்னியாகுமரி: எப்பொழுதுமே கன்னியாகுமரியில் ஜெயிக்கும் கட்சிதான், மத்தியில் ஆட்சியைப் பிடிக்கும் என்பது அரசியல் கட்சிகளின் ஆருடமாகவும், சென்டிமெண்டாகவும் இருந்து வருகின்றது.
இந்நிலையில், கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன் 1 லட்சத்து 28 ஆயிரத்து 662 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று பாஜகவின் தமிழக "எல்லைச்சாமி" ஆக மாறியுள்ளார்.
மோடி அலை தமிழகத்திலும் வீசும் என்று கணக்குப் போட்ட தேஜ கூட்டணிக்கு கிடைத்ததென்னவோ 2 இடங்கள்தான்.அதிலும் ஒன்று பாமகவின் அன்புமணி ராமதாஸ் தட்டி சென்று விட்டார்.

ஆனால், "சிங்கம் சிங்கிளா வரும்" என்பது போல பாஜகவின் ஒரே ஒரு வேட்பாளராக பொன்.ரா வெற்றிக் கனியைப் பறித்துள்ளார்.
முதல் 3 சுற்றுகள் வரை காங்கிரஸ் வேட்பாளர் வசந்தகுமாருடன் சடுகுடு ஆடிய பொன்.ரா 4 ஆவது சுற்றில் இருந்து விறுவிறுவென்று ஆட்டத்தில் முன்னணிக்கு வந்தார்.
மாலை 4 மணிக்கு வெளியான 14 ஆவது சுற்று முடிவுகளின் படி, 3 லட்சத்து 72 ஆயிரத்து 906 வாக்குகள் பெற்று பாஜகவின் அடையாளத்தை தக்க வைத்தார் பொன்.ரா.
எனவே, கோட்டையை பாஜகவின் மோடி பிடித்தார் என்றால், தமிழகத்தின் எல்லையை பாஜகவின் பொன்.ரா பிடித்து சாதனை படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications