தாமிரபரணி தண்ணியை விட்டு.. நெல்லையில் பொங்கல் பானை தயாரிப்பு ஜரூர்!
நெல்லை: இதோ வந்து விட்டது பொங்கள்.. பொங்கல் வைக்க பானை தேவை இல்லையா.. அந்த மண்பானைகள் தயாரிப்பு தமிழகம் எங்கும் தீவிரமாக நடந்து வருகிறது. அந்த வகையில், நெல்லை மண்ணிலும் பொங்கல் பானை தயாரிப்பு உச்சத்தை எட்டியுள்ளது.
மண்ணுக்கு பெருமை சேர்க்கும் மகத்துவம் வாய்ந்த கலாச்சாரத் திருவிழா, உழவனின் விரல்களுக்கு கணையாழி அளிக்கும் திருநாள் வந்து விட்டது. தமிழர்களின் திருவிழா, உழவர்களின் பெருவிழா பொங்கல் விழா.
தை முதல் நாளான்று தை பொங்கல் திருநாள் கொண்டாடப்படுகிறது. பொங்கலுக்கு தமிழர் திருநாள் என்பதை போல் உழவர் திருநாள் என்ற சிறப்பு பெயரும் உண்டு. உழவுக்கும், தொழிலுக்கும், வந்தனை செய்வோம் என்பதற்கு ஏற்ப உழவர் திருநாளை தமிழர்கள் வெகுசிறப்பாக கொண்டாடுவர். பொங்கல் நாளன்று அடுப்பில் பொங்கல் பானை வைக்கப்பட்டு அதற்கு பொட்டு வைத்து, பானையை சுற்றி மஞ்சள் குலை கட்டி அதில் பொங்கல் வைப்பார்கள்.

தை நாளில்.. புதுப் பானையில் பொங்கல்
தை மாதம் பிறக்கும் போது பொங்கல் பானை வைக்கப்படுவது தொன்று தொட்டு இருந்து வரும் வழக்கம். பொங்கல் பானை தயாரிக்கும் பணி நெல்லை மாவட்டம் தென்காசி, செங்கோட்டை, இலஞ்சி, தேன்பொத்தை, கூனியூர் ஆகிய இடங்களில் நான்கு தலைமுறையாக பராம்பரியத் தொழிலாக செய்து வருகின்றனர். இங்கு தயாரிக்கும் மண் பானைகள் பொது மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. காரணம் இங்கு கிடைக்கும் மண் தரமானதாக இருக்கிறது.

செங்கோட்டை பானைகளுக்கு வரவற்பு
நெல்லை மாவட்டம், கன்னியாகுமரி மாவட்டம், கேரளாவின் அனேக இடங்களில் செங்கோட்டையில் தயாராகும் பொங்கல் பானை்ககு நல்ல கிராக்கி இன்றும் உள்ளது. நெல்லை மாவட்டத்தில் மட்டும் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் இந்த பானை தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.

களி மண்ணை எடுத்து
ஆற்றில் இருந்து எடுக்கபடும் களி என்ற மண்ணை எடுத்து வந்து சாலை ஓரங்களில் காயவைத்து உலர்த்தி பின்பு தேவையான நீர் சேர்த்து குழப்பி அதிலிருந்து பானை தயார் செய்கின்றனர். பெரும்பாலும் ஒரு குடும்பத்தில் ஆணும், பெண்ணும் இதில் ஈடுபடுகின்றனர். மண் உலர்த்த, பானை தட்ட, பானையை அடுக்க பெண்ணும், பானை உலர்த்தி, அதை பக்குவமாக தீயில் சுட்டு எடுக்கும் பணியை ஆணுமாக செய்கின்றனர். பின்பு பானைக்கு சிவப்பு சாயம் பூசி காய வைக்கின்றனர்.

பொங்கலை நம்பி
பொங்கல் நேரங்களில் அதிக அளவில் விற்கப்படும் இந்த மண் பானைகளால் தங்களுக்கு ஒரளவு வருமானம் கிடைக்கும் என இவர்கள் தெரிவிக்கின்றனர். அதே நேரத்தில் சென்னை, மதுரை, கோவை, திருச்சி போன்ற நகரங்களில் வசிக்கும் மக்கள் மண் பானையில் பொங்கல் விடுவதில்லை என்றும், சில்வர், பித்தளை போன்ற பாத்திரங்களில் தற்போது பொங்கல் விடுவதால் தங்கள் தொழில் நலிவடைந்து வருவதாக வேதனை தெரிவிக்கின்றனர். மேலும் தங்களுக்கு போதிய இடவசதியும் இல்லை என வருத்தம் தெரிவிக்கும் இவர்கள் மண் உலர்த்த, பானையை காய வைக்க, பாதுகாப்பாக அடுக்கி வைக்க இட வசதியும் இருந்தால் இந்த தொழிலில் மேலும் வளர்ச்சி பெறும் என்றும் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

கேரளாவில் நல்ல கிராக்கி
அண்டை மாநிலமான கேரளாவில் மாதந்தோறும் அம்மனுக்கு பொங்கலி்ட்டு வழிபடுவது வழக்கம் என்று தெரிவிக்கும் இவர்கள் அதிக அளவில் இங்கிருந்து பானைகள் கேரளாவுக்கு விற்கப்படுவதாகவும் தெரிவிக்கின்றனர்.

நீங்களும் மாறுங்கள் தமிழர்களே
தமிழர்களும் மீண்டும் மண் பானைகளில் பொ்ங்கலிடும் பழக்கத்திற்கு மாறினால் தங்களின் வாழ்வாதாரம் மேம்படும் என்றும் தெரிவிக்கின்றனர். மேலும் மண் எடுப்பதில் அரசு கெடுபிடி செய்வதாகவும், வருவாய் துறையினர் கொஞ்சம் கருணை கூர்ந்தால் எங்கறது தொழில் செழிப்படையும் என கூறும் இவர்கள், மண் பானைகளில் சமைத்து சாப்பிட்டால் வியாதிகள் வராது என்றும், மண் பானை மருத்துவ குணமுடையது, அதனால்தான் இன்றளவும் நாட்டு மருந்து காய்ச்சுபவர்கள் மண் பானையிலேயே காய்ச்சுகின்றனர் என தெரிவித்தனர்.

நாவுக்கு ருசி.. உடலுக்கும் நல்லது
மண்பானையில் சமையல் செய்து சாப்பிடுவது நாவுக்கு ருசியாகவும், உடலுக்கு வலிமை நிறைந்ததாகவும் இருக்கும். நோயற்ற வாழ்வுக்கு மண்பானை சமையல்தான் நல்லது என்று மருத்துவர்கள் சொல்ல்கின்றனர். அதனால்தான் கேரள மக்கள் மண்பானையை விரும்பி பயன்படுத்துகிறார்கள்.

நகரங்களில் அழியும் கலாச்சாரம்
சென்னை, மதுரை உள்ளிட்ட நகரங்களில் பெரிய உணவகங்களில் மண்பானை சமையலுக்கு என்று தனி வாடிக்கையாளர்கள் உள்ளனர். அழிந்து கொண்டிருக்கும் தமிழர் கலாச்சாரத்தை ஆடைகளில் மட்டுமே மீட்டெடுத்துக் கொண்டிருக்கும் இன்றைய காலக் கட்டத்தில் அழிந்துக் கொண்டிருக்கும் நமது பாரம்பரியமான கலையான மன்பாண்டத்தொழிலை அழிவிலிருந்து காப்பாற்ற வேண்டியது காலத்தின் கட்டாயம்.

தொழிலாளர்கள் இல்லங்களில் அடுப்பெரியும்
வரும் காலங்களில் பொங்கல் பண்டிகை காலக்கட்டங்களில் மட்டுமின்றி கோவில் திருவிழாக்களிலும் மண்பானைகளை பயன்படுத்தினால் இந்த தொழில் புரியும் மக்களின் வாழ்வு மலரும், அவர்கள் இல்லங்களிலும் அடுப்பெரியும் என்பது நிதர்சனமான உண்மை.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications