வேகமாக பரவும் ”மெட்ராஸ் ஐ” – தடுப்பது எப்படி?
சென்னை: "மெட்ராஸ் ஐ" என்று சொல்லக்கூடிய கண் நோய் சென்னையில் வேகமாக பரவுகிறது.
இந்த நோய் கோடை காலத்தில் மட்டுமல்ல குளிர் காலத்திலும் வரக்கூடியது.
"அடினோ" என்ற வைரஸ் கிருமி மூலம் கண் நோய் பரவுகிறது.

கண்நோய் சிகிச்சை:
தற்போது அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கண் நோய் பாதித்த பலர் சிகிச்சை பெற்று செல்வதை காண முடிகிறது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் இது பாதிக்க கூடியது.

கோடை தாக்கம்:
கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் பலருக்கு கண் நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

தினசரி 10 பேர்:
இதுகுறித்து அகர்வால் கண் மருத்துவமனையின் கண் ஆலோசகர் டாக்டர் சவுந்தரி,"மெட்ராஸ் ஐ" பாதிப்பு தற்போது அதிகரித்து வருகிறது. தினசரி 10 நோயாளிகள் கண் நோய் பாதித்து சிகிச்சை பெற்று செல்கிறார்கள்.

சிவப்பான கண்கள்:
இந்நோய் பாதித்தவர்களை மற்றவர்கள் பார்ப்பதனால் தங்களுக்கும் இந்நோய் பரவும் என்று மக்கள் மத்தியில் தவறான கருத்து நிலவுகிறது. இந்நோய் பாதித்தவர்களுக்கு கண்கள் சிகப்பாக இருக்கும். ரத்த வீக்கம் காணப்படும். கண்ணில் இருந்து நீர் வடியும். கண் உருத்தல் இருக்கும்.

கண்நோய் அறிகுறிகள்:
காலையில் கண் விழிக்கும்போது கண்களை திறக்க கடினமாக இருக்கும். கண்கள் ஒட்டி காணப்படுவது போன்றவை கண் நோயின் அறிகுறிகளாகும்.

பரவும் நோய்:
கண்ணில் இருந்து வடியும் நீரினால் இந்நோய் மற்றவர்களுக்கு பரவும். கிருமி பாதிப்புள்ள அந்த நீர் பிறர் கையில் படும்போது அவருக்கு இந்நோய் வருவதற்கு வாய்ப்பு உள்ளது.

குடும்பம் முழுதும் பாதிப்பு:
ஒரு குடும்பத்தில் ஒரு வருக்கு வந்தால் மற்றவர்களுக்கு வரும். கண் நோய் பாதித்தவர்கள் படுக்கை, துண்டு போன்ற வற்றை மற்றவர்கள் பயன்படுத்தக் கூடாது. அதன் மூலமும் அவை பரவும்.

சுத்தமான கண்கள்:
எனவே கண் நோய் பாதிக்கப்பட்டவர்கள் கைகளை கழுவி சுத்தமாக வைத்திருக்க வேண்டும். கண் நோய் வந்தால் குறைந்தது ஒரு வாரம் முதல் 10 நாட்கள் வரை இருக்கும்.

மருத்துவரை அணுகவும்:
அருகில் உள்ள கண் மருத்துவரை அணுகி முறைவான சிகிச்சை பெற வேண்டும். மருந்து கடைகளில் சொட்டு மருந்து வாங்கி தானே போட்டு கொள்ளக் கூடாது"இவ்வாறு அவர் கூறினார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications