நெருங்கும் பொங்கல்.. பானைகளை அலங்கரிக்க வந்து குவியும் மஞ்சள் குலைகள்
நெல்லை: தமிழகத்தில் பொங்கல் பண்டிகை நெருங்கி விட்டதால் அது தொடர்பான பொருட்களின் வருகை மார்க்கெட்டுகளை மையம் கொள்ள ஆரம்பித்துள்ளன. குறிப்பாக மஞ்சள்குலைகள் குவிய தொடங்கியுள்ளன.
தமிழக மக்களின் முக்கிய பண்டிகை பொங்கல். நாளை மறுநாள் பொங்கல் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பூக்கள் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. மேலும் விற்பனைக்காக கரும்பு, மஞ்சள், பனங்கிழங்குகள் குவிய தொடங்கியுள்ளன. கூடவே மண்பானைகளும் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளன.

தேனி, திண்டுக்கல் போன்ற வெளிமாவட்டங்களில இரு்ந்து கொண்டு வரப்பட்ட கரும்புகள், பாளை மார்க்கெட், சந்திப்பு, டவுன் மார்க்கெட் போன்ற பகுதிகளில் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளன. இது போல நெல்லை சுற்று வட்டார கிராமங்களான மணிமூர்த்திஸ்வரம், அருகன்குளம், செப்பறை உள்ளிட்ட பகுதிகளில் விளைந்த மஞ்சள் குலைகளை பறித்து சுத்தம் செய்து விற்பனைக்காக அனுப்பி வருகின்றனர்.
நெல்லை மணிமூர்த்திஸ்வரம் பகுதியை சேர்ந்த விவசாயி ஆறுமுகம் தனது தோட்டத்தில் விளைந்த மஞ்சள் குலைகளை ரூ.10 முதல் ரூ.15 வரை விற்பனை செய்ததாக தெரிவித்தார். விவசாயிகள் இருந்து மஞ்சள் குலைகளை மொத்தமாக வாங்கி அவற்றை மார்க்கெட்டில் வியாபாரிகள் ரூ.15 முதல் அதிகபட்சமாக ரூ.30 வரை விற்பனை செய்து வருவதாக கூறப்படுகிறது.
இது போல் கரும்பும் ஒரு கரும்பு ரூ.50 முதல் ரூ.100 வரை விற்கப்படுகிறது. பனங்கிழங்கு (10 எண்ணம்) ரூ.30 முதல் ரூ.50 வரை விற்கப்படுகிறது. இந்த விலை உயர்வால் பொதுமக்கள் திண்டாடி வருகின்றனர். இந்த நிலையில் ரேசன் கடைகளில் வழங்கப்படும் கரும்புகள் வெறும் 1 துண்டு மட்டுமே கிடைப்பதால் பலர் வெறுப்பில் உள்ளனர். குறைந்தபட்சம் ஒரு முழு கரும்பையாவது கொடுத்தால் உபயோகமாக இருக்கும் என வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.
-
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மீண்டும் வந்த அதே வரலாற்று சிக்னல்.. தங்கம் விலை மிகப்பெரிய அளவில் சரிகிறது.. இப்போ வாங்கலாமா? -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா












Click it and Unblock the Notifications