சர்ச்சையை கிளப்பிய ராமேஸ்வரம் பாம்பன் மசூதி மினார்வா மீதான தார்ப்பாய் அகற்றம்- தமிழக அரசு அதிரடி!

Subscribe to Oneindia Tamil

ராமேஸ்வரம்: பிரதமர் நரேந்திர மோடியின் வருகைக்காக ராமேஸ்வரம் பாம்பனில் உள்ள பள்ளி வாசலின் (மசூதி) மினாராவை தார்ப்பாய் கொண்டு மறைத்திருப்பதாக சர்ச்சைகள் வெடித்த நிலையில் தற்போது அந்த தார்பாய் அகற்றப்பட்டது.

எஸ்டிபிஐ கட்சியின் மாநில பொதுச் செயலாளர் அகமது நவவி வெளியிட்டிருந்த அறிக்கையில், புதிய பாம்பன் ரயில்வே பாலம் திறப்பு நிகழ்வுக்கான பிரதமர் மோடியின் ராமேஸ்வரம் வருகையை முன்னிட்டு, பாம்பன் பாலத்திற்கு அருகிலுள்ள பள்ளிவாசலின் மினாராவில் உள்ள எழுத்துக்களை தார்ப்பாய் கொண்டு மறைத்திருப்பது மிகவும் கண்டனத்திற்குரிய செயலாகும். இது மதச்சார்பின்மையை அடிப்படையாகக் கொண்ட இந்திய அரசியலமைப்பிற்கு எதிரானது மட்டுமல்லாமல், முஸ்லிம் சமூகத்தின் மத உணர்வுகளை புண்படுத்தும் அநாகரிக செயலாகவும் உள்ளது என கண்டனம் தெரிவித்திருந்தார்.

இது தொடர்பாக நாம் ராமேஸ்வரம் பாம்பனில் விசாரித்த போது, பிரதமர் மோடி வருகை தர இருப்பதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பாம்பம் மசூதியின் மினாராவில் பெயர் பலகை அனுமதி இல்லாமல் வைக்கப்பட்டிருந்தது; அங்கு கட்டுமானப் பணிகளும் நடைபெற்றன; இதனால் தார்பாய் கொண்டு மூடப்பட்டிருந்தது என்று விளக்கம் தரப்பட்டது.

தற்போது சர்ச்சைக்குரிய மசூதியின் மினர்வாவை மறைத்த தார்பாய் முற்றிலும் அகற்றப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் அதிரடி நடவடிக்கை மூலம் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+