தமிழகத்தில் தனியார் பால் விலை லிட்டருக்கு ரூ.5 வரை உயர்வு- இன்று முதல் அமல்!
சென்னை: தமிழகத்தில் தனியார் நிறுவனங்கள் ஒரு லிட்டர் பால் விலையை ரூ2. முதல் ரூ5 வரை உயர்த்தியுள்ளன. இது இன்று முதல் அமலுக்கு வருகிறது. இதற்கு தமிழக பால் முகவர்கள் சங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
பால் கொள்முதல் விலை, மூலப் பொருள்கள், பெட்ரோல், டீசல் விலை உயர்வு ஆகியவற்றைக் காரணம் காட்டி 2015-ம் ஆண்டு தமிழகத்தில் 4 முறைக்கும் மேல் தனியார் பால் விலை உயர்த்தப்பட்டது. உற்பத்தி அதிகரிப்பை அடுத்து, தனியார் பால் நிறுவனங்கள் விலையை சற்று குறைத்து அறிவித்தன.
இந்த நிலையில், பால் விலையை லிட்டருக்கு ரூ.2 முதல் ரூ.5 வரை உயர்த்துவதாக தனியார் பால் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

இதைக் கண்டித்து தமிழ்நாடு பால் முகவர்கள், தொழிலாளர்கள் நலச் சங்கத் தலைவர் எஸ்.ஏ.பொன்னுசாமி நேற்று வெளியிட்ட அறிக்கையில், ஹட்சன் ஆரோக்யா நிறுவனம் ரூ.2 முதல் ரூ.5 வரையில் செவ்வாய்க்கிழமை முதல் உயர்த்த உள்ளது கண்டிக்கத்தக்கது. இந்த நிறுவனம் பால் விலையை உயர்த்துவதால், அனைத்து தனியார் பால் நிறுவனங்களும் விலையை உயர்த்தும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்தப் பிரச்னையில் தமிழக அரசு தலையிட்டு பால் விலை உயர்வை திரும்ப பெறச் செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
மேலும் பால் விலையை நிர்ணயிக்க ஐ.ஏ.எஸ். அதிகாரி, பொதுமக்களின் பிரதிநிதி, தனியார் பால் நிறுவனத்தைச் சேர்ந்த பிரதிநிதி, பால் முகவர் சங்க நிர்வாகி ஆகியோர் கொண்ட 4 பேர் குழுவை அமைக்க வேண்டும். தனியார் பால் நிறுவனங்களை வரைமுறைப்படுத்தும் உரிய நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications