For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சிங்கள இயக்குநருக்கு ஆதரவு: ஆடுகளம் வில்லன் கவிஞர் ஜெயபாலனுக்கு அடி உதை!

By Shankar
Google Oneindia Tamil News

சென்னை: சிங்கள இயக்குநருக்கு ஆதரவாகப் பேசிய நடிகரும் கவிஞருமான வா ஐ செ ஜெயபாலனுக்கு அடி உதை விழுந்தது.

தனுசின் ‘ஆடுகளம்' படத்தில் வில்லனாக நடித்தவர் ஜெயபாலன். பரதேசி உள்ளிட்ட மேலும் பல படங்களிலும் நடித்துள்ளார்.

இந்த இலங்கை தமிழ் கவிஞர் இருப்பது நார்வே என்றாலும், அடிக்கடி சென்னை வந்துவிடுவார்.

Pro Sinhalese speech: Aadukalam Jayabalan attacked

சமீபத்தில் சிங்கள இயக்குநர் பிரசன்ன விதானகே இயக்கிய வித்யு வித்தவுட் யு என்ற படத்தின் சிறப்பு காட்சி சென்னையில் உள்ள இரண்டு தியேட்டர்களில் திரையிட இயக்குநர் முயன்றார்.

ஆனால் இங்குள்ள தமிழ் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. இது ஈழத் தமிழர்களுக்கு எதிரான படம் என்று கூறினர். இதையடுத்து படம் திரையிடுவது நிறுத்தப்பட்டது. படத்தில் தமிழர்களுக்கு எதிரான காட்சிகள் இல்லை என்று கூறிய இயக்குநர், படத்தை தமிழ் அமைப்பினருக்கு திரையிட்டு காட்டவும் ஏற்பாடு செய்தார்.

படத்தைப் பார்ப்பதற்காக நடிகர் ஆடுகளம் ஜெயபாலன், இயக்குநர் கவுதமன், மற்றும் 17 இயக்கத்தினர் மற்றும் மாணவர்கள் வந்து இருந்தனர்.

படம் முடிந்ததும் சிங்கள இயக்குநர் பிரசன்ன விதானகேவிடம் கேள்விகள் கேட்கப்பட்டன. படத்தில் பல இடங்களில் பயங்கரவாதிகள் என வசனம் வருவதாகக் கண்டித்தனர். இயக்குநர் கவுதமன் உள்ளிட்டோர் கேட்ட கேள்விகளுக்கு சிங்கள இயக்குநரிடம் பதிலே இல்லை.

இந்த நேரம் பார்த்து எழுந்த நடிகர் ஜெயபாலன் எழுந்து, "அருமை பிரசன்னா.. வெல்டன். நல்ல படம்" என்று பேச ஆரம்பித்தார்.

இதனால் ஆத்திரம் அடைந்த தமிழ் அமைப்பினர் சிலர் ஜெயபாலனைத் தாக்கினர். உடனே அங்கிருந்த போலீசார் மீட்டு அவரை பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர். கடும் கோபத்தில் தமிழ் அமைப்பினரைத் திட்டியபடி சென்றார் ஜெயபாலன்.

English summary
Aadukalam fame actor - poet Jayabalan was attacked by Tamil activists for his pro Sinhalese speech.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X