For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

உங்களை எம்.எல்.ஏவாக ஏற்க முடியாது.. குடியாத்தம் தொகுதி மக்கள் ஆவேசம்

சசிகலா ஆதரவு எம்எல்ஏக்களுக்கு தொகுதிகளில் மக்களிடைய எதிர்ப்பு நீடித்து வருகிறது.

By Karthikeyan
Google Oneindia Tamil News

வேலூர்: எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக வாக்களித்த குடியாத்தம் தொகுதி எம்எல்ஏ ஜெயந்தி பத்மநாபனுக்கு தொகுதி மக்களிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

ஜெயலலிதா மரணத்திற்குப் பிறகு தமிழக முதல்வராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் கடந்த 5ஆம் தேதி தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து சசிகலா முதல்வராக காய் நகர்த்தினார்.

protest against admk admk mla gudiyatham

சொத்துக்குவிப்பு வழக்கில் சிறைக்கு சென்றதால் சசிகலா முதல்வராக முடியவில்லை. பின்னர் எடப்பாடி பழனிச்சாமி சட்டசபை குழுத் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். இதனையடுத்து ஆளுநரிடம் ஆதரவு கடிதம் அளித்து முதல்வராக பதவியேற்றார் எடப்பாடி பழனிச்சாமி. நம்பிக்கை வாக்கெடுப்பிலும் வெற்றி பெற்றுள்ளார்.

இந்நிலையில் நம்பிக்கை வாக்கெடுப்பின்போது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக வாக்களித்த குடியாத்தம் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ.முக எம்.எல்.ஏ ஜெயந்தி பத்மநாபனுக்கு தொகுதி முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

protest against admk admk mla gudiyatham

"தமிழகத்தின் கருப்பு தினம் பிப்ரவரி 18" என்ற தலைப்பில் ஜெயந்தி பத்மநாபனை கண்டித்து ஒரு துண்டு பிரசுரம் தொகுதிக்குட்பட்ட பல்வேறு இடங்களில் தரப்பட்டுள்ளது. மேலும் முதல்வராக இருந்து மறைந்த ஜெயலலிதா அம்மையார் மரணத்தில் மர்மம் உள்ளது. அதற்கு காரணமான மன்னார்குடி மாபியா கும்பலுக்கு எப்படி ஆதரவு அளிக்க மனம் வந்தது. ஆதரவு அளித்துவிட்டு, பெரிய துரோகத்தை செய்துவிட்டு மக்கள் மத்தியில் எப்படி வருகிறீர்கள் என கேள்வி எழுப்பியுள்ளனர். இவ்வளவு பெரிய துரோகத்தை செய்துவிட்டு மக்கள் மத்தியில் எப்படி வருவீர்கள்..என பல வாசகங்கள் அதில் இடம்பெற்றுள்ளது.

இந்த துண்டு பிரசுரம் குடியாத்தம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே மக்களின் எதிர்ப்புகளுக்கு மத்தியில் கட்சி அலுவலகத்திற்கு வந்தார் ஜெயந்தி பத்மநாபன். அவருக்கு அதிமுக நிர்வாகிகள் வரவேற்பு அளித்தனர். அங்கு கட்சி நிர்வாகிகளுடன் அவர் ஆலோசனை நடத்தினார்.

English summary
protest against admk mla Jayanthi padmanabhan in gudiyatham
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X