For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

புதுச்சேரியில் 24 மணிநேரத்தில் 11 செ.மீ. மழை: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

By Siva
Google Oneindia Tamil News

புதுச்சேரி: புதுச்சேரியில் இன்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணிநேரத்தில் 11.09 செ.மீ. மழை பெய்துள்ளது.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் கடந்த ஒரு வார காலமாக கனமழை பெய்து வருகிறது. சென்னை வெள்ள நீரில் மிதக்கிறது. கடலூர் மாவட்டம் கனமழையால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நாளை வரை கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Puducherry lashed by 11 cm rainfall

புதுச்சேரியில் இன்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணிநேரத்தில் 11.09 செ.மீ. மழை பெய்துள்ளது. மழையையொட்டி புதுச்சேரி, காரைக்காலில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது.

கனமழையால் புதுச்சேரியில் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் கனமழையால் ஏற்பட்ட பயிர் சேதம் குறித்து கணக்கிடுமாறு முதல்வர் ரங்கசாமி விவசாயத் துறை இயக்குனரகத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.

இன்று காலை 9 மணியில் இருந்து மழை நின்றிருந்தாலும், வானம் மேகமூட்டமாக உள்ளது.

English summary
Educational institutions in the Puducherry and Karaikal remained closed today in the wake of incessant rains. The Union Territory recorded 11.09 cm rain in the last 24 hours ending 8.30 a.M today, official sources said.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X