நான் இன்னும் அதிமுகவில்தான் உள்ளேன்.. சும்மாதான் தினகரனை பார்த்தேன்.. எம்பி கோகுலகிருஷ்ணன்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தான் இன்னும் அதிமுகவில்தான் இருப்பதாக தினகரனை சந்தித்த புதுச்சேரி எம்பி கோகுலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

டிடிவி தினகரன் ஆர்கே நகர் இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு முதல்வர் எடப்பாடி அணியில் இருந்து பலர் அவருக்கு நேரில் சென்று வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

தேர்தல் முடிவுகள் வெளியான போது வேலூர் எம்பி செங்குட்டுவன் தினகரனை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

கட்சியிலிருந்து நீக்கம்

கட்சியிலிருந்து நீக்கம்

மேலும் பலர் தினகரன் அணிக்கு தாவ உள்ளதாக தகவல் வெளியானதை அடுத்து நேற்று ஆலோசனை கூட்டம் நடத்திய முதல்வர் மற்றும் துணை முதல்வர் தினகரன் ஆதரவாளர்களான நாஞ்சில் சம்பத், சிஆர் சரஸ்வதி, புகழேந்தி உள்ளிட்டவர்களை கட்சியில் இருந்து நீக்கினர்.

நேற்று கனகராஜ் எம்எல்ஏ

நேற்று கனகராஜ் எம்எல்ஏ

மேலும் கட்சிக்கு துரோகம் செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர்கள் எச்சசரித்தனர். ஆனாலும் நேற்று மாலை சூலூர் எம்எல்ஏ கனகராஜ் டிடிவி தினகரனை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

தினகரன் தலைமையில்..

தினகரன் தலைமையில்..

மேலும் தினகரன் தலைமையில்தான் கட்சியும் ஆட்சியும் தொடர வேண்டும் என்றும் கனகராஜ் தெரிவித்தார். இது அதிமுகவினர் இடையே சலசலப்பை ஏற்படுத்தியது.

மரியாதை நிமித்தமாக..

மரியாதை நிமித்தமாக..

இந்நிலையில் புதுச்சேரி எம்.பி. கோகுல கிருஷ்ணன், சென்னை அடையாறு இல்லத்தில் தினகரனை இன்று சந்தித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் தினகரனை மரியாதை நிமித்தமாக சந்தித்தாக கூறினார்.

அதிமுகவில்தான் உள்ளேன்

அதிமுகவில்தான் உள்ளேன்

மேலும் அ.தி.மு.க.,வில் தான் இருப்பதாகவும் எம்பி கோகுல கிருஷ்ணன் கூறினார். தினகரன் ஆதரவாளர்களை கட்சியில் இருந்து நீக்கியப் பிறகும் கூட அதிமுகவினர் தினகரனை சந்தித்து வருவது கட்சியினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Puducherry MP Gokula Krishnan meets TTV Dinakaran in his house. After meeting with him Gokulakirshnan said he is still in ADMK respectly met with Dinakaran.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற