மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்தது உண்மைதான்- புனிதா வாக்குமூலம்
பொருளாதார சிக்கலில் சிக்கியதால் மாணவிகளை பாலியல் தொழிலுக்கு அழைத்தேன் என்று கோவை புனிதா வாக்குமூலம் அளித்துள்ளார்.
Recommended Video

கோவை: மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்தது உண்மைதான் என்று கோவை விடுதி காப்பாளர் புனிதா போலீஸாரிடம் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார்.
கோவை பீளமேடு பகுதியில் தனியார் மகளிர் தங்கும் விடுதி உள்ளது. இங்கு நூற்றுக்கணக்கான பெண்கள், கல்லூரி மாணவிகள் தங்கி பணிக்கும் கல்லூரிக்கும் சென்று வந்தனர். இந்த ஹாஸ்டல் ஜெகந்நாதன் என்பவருக்கு சொந்தமானது.
இதன் வார்டனாக புனிதா (32) இருந்தார். இவர் ஹாஸ்டலில் தங்கி படிக்கும் மாணவிகளை பெரிய பெரிய நட்சத்திர ஹோட்டல்களுக்கு அழைத்து சென்று குடிபழக்கத்தை கற்று கொடுப்பது வழக்கமாம்.

புகார்
இவரும் எப்போதும் போதையிலேயே இருப்பார் என்று மாணவிகள் கூறினர். இந்நிலையில் இவர் மாணவிகளை வாட்ஸ் ஆப் கால் மூலம் விடுதி ஓனர் ஜெகந்நாதனுடன் பேசுமாறு கட்டாயப்படுத்தியுள்ளார். மேலும் 4 பெண்களை ஜெகந்நாதனுடன் உறவுக் கொள்ளும்படியும் வற்புறுத்தியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவிகள் தங்கள் பெற்றோரிடம் புகார் கூறினர்.

கிணற்றில் சடலமாக மீட்பு
இதுகுறித்து பெற்றோர் பீளமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதையறிந்த ஜெகந்நாதனும் ,புனிதாவும் தலைமறைவாக இருந்தனர். இந்நிலையில் ஜெகந்நாதன் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆலங்குளத்தில் உள்ள ஒரு கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டார்.

14-ஆம் தேதி வரை காவல்
இது தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் தலைமறைவாக இருந்து வரும் புனிதா கடந்த 1-ஆம் தேதி கோவை நீதிமன்றத்தில் சரணடைந்தார். அவரை வரும் 14-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

உண்மையை ஒப்புக் கொண்ட புனிதா
இந்நிலையில் 2 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க போலீஸார் அனுமதி கேட்டனர். அதன்படி புனிதாவை 2 நாள் போலீஸ் காவலில் வைக்க அனுமதி வழங்கப்பட்டது. புனிதாவிடம் நடத்திய விசாரணையில் தான் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டிருந்ததால் மாணவிகளை பாலியல் தொழிலுக்கு அழைத்ததாக ஒப்புக் கொண்டார். மேலும் இத்தனை நாட்கள் தான் சென்னை இருந்ததாகவும் புனிதா வாக்குமூலம் அளித்தார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications