2018 இறுதியில் தமிழகம் வெள்ளத்தில் மூழ்குமாம்.. பீதியைக் கிளப்பும் புயல் ராமச்சந்திரன்!
சென்னை: தமிழகம் 2018-ஆம் ஆண்டு இறுதியில் வெள்ளத்தில் மூழ்கும் நிலை ஏற்படும் என்று புயல் ராமசந்திரன் பீதியை கிளப்பியுள்ளார்.
வானிலை அறிவிப்பு அன்றாட விஷயங்களில் ஒன்றாக மாறி விட்டது. காரணம் சூழல்களும் மாறிப் போய் விட்டன. பெருமழைக்காலங்கள் இப்போது சகஜமான ஒன்றாகி விட்டன. பலரும் இப்போது வானிலை முன்னறிவிப்புகளை செய்து வருகின்றனர். அந்த அளவுக்கு வானிலை செய்திகள், அன்றாடம் கவனிக்கப்படும் செய்திகளாக மாறியுள்ளன.
அந்த வகையில், புயல் ராமச்சந்திரனும் வானிலையை கணித்து அடிக்கடி சொல்லி வருகிறார். இவர் பஞ்சாங்கத்தின் அடிப்படையில் கணிப்புகளை சொல்பவர் ஆவார்.
பொய்யானதில்லை
வெறும் பஞ்சாங்கத்தை அடிப்படையாக கொண்டு எத்தனை வருடங்களுக்கு வேண்டுமானாலும் வானிலையை கணிக்கலாம் என்று சவால் விடுகிறார் புயல் ராமசந்திரன். இவரது பஞ்சாங்க அடிப்படையிலான வானிலை ஆய்வை கொண்டு இதுவரை கணித்தவை பொய்யானதில்லை என்றும் அடித்து கூறுகிறார்.
ஆராய்ச்சி
நேபாளத்தில் 2016-ஆம் ஆண்டு பலத்த நிலநடுக்கம் ஏற்படும் என்றும் இதில் பல உயிர்கள் பலியாகும் என்றும் தான் ஏற்கெனவே கணித்ததாகவும் ஆனால் இடத்தை மட்டும் தன்னால் கணிக்க முடியவில்லை என்றும் அதற்காக ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் இவர் கூறுகிறார்.

தொழில்நுட்பம்
இவர் தற்போது புதிய ஒரு குண்டை போடுகிறார். அதாவது 2018-ஆம் ஆண்டு இறுதியில் தமிழகமே வெள்ளத்தில் மூழ்கும் என்கிறார். இதை கடந்த ஆண்டே கணித்து விட்டாராம்.

துல்லியம்
வானிலை ஆய்வாளர்கள் வைத்துள்ள தொழில்நுட்பத்தினால் அதிகபட்சம் 48 மணி நேரத்துக்கு கணித்து சொல்லலாம். இது போல் நாட்கணக்கில் அவர்களால் கணித்து சொல்ல முடியாது என்று கூறுகிறார் புயல் ராமசந்திரன். பஞ்சாங்கத்தை மூடநம்பிக்கையாக பார்க்காமல் அறிவியலாக பார்த்தோமேயானால் வானிலையை இன்னும் துல்லியமாக கணிக்கலாம் என்கிறார்.

நிச்சயம் பாதிப்பு
ஒரு வருடத்துக்கு முன்னாலேயே சொல்லும் அளவுக்கான விஞ்ஞானத்தை பஞ்சாங்க அறிவியலை பயன்படுத்தி கணிக்கலாம் என்று கூறுகிறார் ராமசந்திரன். இந்த ஆண்டு அக்டோபருக்கு பிறகு, தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையால் நிச்சயம் பாதிப்புகளை உருவாக்கும்.

வெள்ளத்தின் பாதிப்பு
அக்டோபர் மாதம் தொடங்கி டிசம்பர் வரை மழை தொடர்ந்து பெய்து கொண்டே இருக்கும். இதில் மதுராந்தகம் அதிலிருந்து தென்தமிழகம் வரையும் வடதமிழகத்தில் மிதமான மழை இருக்கும். தென் மாவட்டம் மற்றும் மத்திய மாவட்டங்களில் வெள்ளத்தின் பாதிப்பு நிச்சயமாக இருக்கும்.

எச்சரிக்கை
எனது வானிலை முன்னறிவிப்புகள் துல்லியமாக நடந்துள்ளது. அதனால் என்னுடைய பயத்தினால் எச்சரிக்கையாக இருக்குமாறு கூறுகிறேன் என்கிறார். இவர் ஒரு வருடத்துக்கு முன்பே கூறியது போல் ஆஸ்திரேலியாவில் கடும் வறட்சி நிலவும் என்று கூறியுள்ளார். அதுபோல் ஆஸ்திரேலியாவில் கடும் வறட்சி ஏற்பட்டுள்ளது. அதுபோல் ஆகஸ்ட் 4 முதல் 11-ஆம் தேதி வரை கடுமையான புயல் ஏற்படும் என்று கூறியுள்ளார். அதன்படியே கேரளத்தில் பலத்த மழை கொட்டியது. புயல் ஒருபக்கம் இருக்கட்டும்.. நாம் நார்மலாக இருப்போம்.. பயம் வேண்டாம்.. வரும் போது பார்த்துக் கொள்வோம்.. இப்ப எதுக்கு பீதி!
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications