சாய் பிரசாந்த் தற்கொலை... அக்ரிமெண்ட் போடும் டிவி நிறுவனங்களுக்கு ராதிகா வேண்டுகோள்
சென்னை: நடிகர்கள் ஒரு தொலைக்காட்சி நாடகத்தில் நடித்தால் மற்றொரு நிறுவனத்தின் தொலைக்காட்சி நாடகத்திலும் நடிக்க டிவி நிறுவனங்கள் அனுமதிக்க வேண்டும்" என்று ராதிகா சரத்குமார் கூறியுள்ளார். சாய் பிரசாந்த் தற்கொலை முன்னிறுத்தி தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு ராதிகா சரத்குமார் இந்த வேண்டுகோளை விடுத்திருக்கிறார்.
சென்னை வளசரவாக்கம் கங்கா நகர் 2-வது தெருவில் வசித்தவர் நடிகர் சாய் பிரசாந்த், 30. சில தினங்களக்கு முன்பு தன்னுடைய வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். குடும்ப பிரச்சினையால் அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டது.
சின்னத்திரையில் நிகழ்ச்சி தொகுப்பாளராக அறிமுகமாகி அரசி, தாமரை உட்பட பல சின்னத்திரை மெகா தொடர்களிலும், நேரம், தெகிடி, வடகறி, ஐந்தாம்படை உட்பட பல திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
சாய் பிரசாந்த்தின் தற்கொலை சின்னத்திரை நடிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை உண்டாக்கி இருக்கிறது. ஃபேஸ்புக், டுவிட்டரில் பல நட்சத்திரங்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
சாய் பிரசாந்த் தற்கொலை குறித்து கருத்து கூறியுள்ள ராதிகா சரத்குமார், என்னுடைய 'அரசி' நாடகத்தில்தான் சமுத்திரக்கனி, சாய் பிரசாந்தை அறிமுகப்படுத்தினார். என்னைப் பார்க்க நிறைய முறை அலுவலகத்திற்கு வருவான். தற்கொலைக்கு முன்பு எழுதிய கடிதத்தில் எனக்கு நன்றி சொல்லியிருப்பதாக சொன்னார்கள், அதை கேட்கும்போது ரொம்ப கஷ்டமாக இருந்தது.

அக்ரிமெண்ட் போடுவதா?
சாய் இறந்த செய்தியைக் கேட்டதில் இருந்தே கோபமாக இருக்கிறேன். சின்னத்திரை என்பது சினிமா மாதிரி கிடையாது. ஒரு தொலைக்காட்சியில் ஒரு நடிகை தன்னுடைய நாடகங்களில் நடிக்கிறார் என்றால், மற்ற தொலைக்காட்சியில் நடிக்கக் கூடாது, ஷோவிற்கு போகக் கூடாது என்று கையெழுத்து வாங்கிக் கொள்கிறார்கள்.

மன உளைச்சல்
இது அவர்களுடைய வேலை வாய்ப்பை பாதிக்கிறது. இதனால் அவர்களுக்கு பொருளாதார நெருக்கடி உண்டாகிறது. இந்த மாதிரி தொலைக்காட்சி நிறுவனங்கள் கையெழுத்து வாங்கி கொள்வதால் நிறைய பேர் மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளார்கள்.

தனிப்பட்ட விசயம்
சின்னத்திரை என்பது ரொம்ப சின்ன இடம் என்பதால் மிகவும் பொருளாதார சிக்கல் நடிகர், நடிகைகளுக்கு ஏற்படுகிறது. நானே நிறைய இடங்களில் ஒரு நடிகரோ அல்லது நடிகையோ மற்ற நிறுவங்களின் நாடகங்களில் நடிக்கப் போவது என்பது அவர்களுடைய தனிப்பட்ட விஷயம் என சொல்லியிருக்கிறேன். அதை தடுக்கக் கூடாது என்று நான் நிறைய சண்டையிட்டு இருக்கிறேன்.

டிவி நிறுவனங்களுக்கு வேண்டுகோள்
திறமையுள்ள நடிகன் எங்கு வேண்டுமானாலும் இருக்கலாம். ஒரு தொலைக்காட்சி நாடகத்தில் நடித்தால் மற்றொரு தொலைக்காட்சி நாடகத்திலும் நடிக்க நிறுவனங்கள் அனுமதிக்க வேண்டும்" என்று ராதிகா சரத்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தாமரை சீரியல்
சாய் பிரசாந்த் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு வரை ராதிகாவின் ராடான் நிறுவனம் தயாரித்து வரும் தாமரை சீரியலில் நடித்து வந்தார். இந்த சீரியல் சன்டிவியில் பிற்பகல் நேரத்தில் ஒளிபரப்பாகி வருகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications