டெல்டாவில் கலவரத்தை கட்டுப்படுத்தும் ஆர்ஏஎப் படை பிரிவு துணை ராணுவம்.. வாபஸ் பெறப்பட்டது!
டெல்டா மாவட்டங்களில் கலவரத்தை கட்டுப்படுத்தும் அதிரடி படை பிரிவு துணை ராணுவத்தினர் குவிக்கப்பட்டு இருந்தனர்.
Recommended Video

திருவாரூர்: டெல்டா மாவட்டங்களில் கலவரத்தை கட்டுப்படுத்தும் அதிரடி படை பிரிவு துணை ராணுவத்தினர் குவிக்கப்பட்டு இருந்தனர். 2000 க்கும் அதிகமான துணை ராணுவத்தினர் குவிக்கப்பட்டு இருந்தனர். தற்போது இவர்கள் வாபஸ் பெறப்பட்டு உள்ளனர்.
டெல்டா மாவட்டங்களில் மீத்தேன் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. இந்த நிலையில் அங்கு உள்ள பகுதிகளில் மக்கள் பல வருடங்களாக இதற்கு எதிராக போராடி வருகிறார்கள். தற்போது மக்கள் போராட்டங்களை முடக்க மத்திய அரசு முடிவெடுத்து இருக்கிறது.

இதனால் டெல்டா மாவட்டங்களில் 2000 க்கும் அதிகமான துணை ராணுவத்தினர் குவிக்கப்பட்டு இருந்தனர். இவர்களில் 80 சதவிகித ராணுவத்தினர் கோவை துணை ராணுவ படை பிரிவு 105ஐ சேர்ந்தவர்கள். இவர்கள அதிவிரைவு படை என்று அழைக்கப்படுவார்கள்.
அதேபோல் இவர்களுடன் ஆர்ஏஎப் எனப்படும் துணை ராணுவ படையின் இன்னொரு பிரிவும் சேர்ந்துள்ளது. இவர்கள் கலவரத்தை கட்டுப்படுத்தும் படை பிரிவு சேர்ந்தவர்கள். இந்த விதமான படைகள் மிகவும் மோசமான நேரத்தில், கலவரம் உண்டாக கூடிய சூழ்நிலையில் மட்டுமே களமிறங்கும்.
டெல்டா மாவட்டங்களில் போராட்டம் நடந்தாலும், அம்மக்கள் மிகவும் அமைதியாக இருக்கிறார்கள். இந்த நிலையில் துணை ராணுவ படை வந்தது ஏன், அதுவும் கலவரத்தை கட்டுப்படுத்தும் படை பிரிவு வந்தது ஏன் என்று கேள்வி உருவாகி இருக்கிறது.
நேற்று இரவும் இவர்கள ஆயுதங்களுடன் சிறிய 'டிரில்' பயிற்சி எடுத்து இருக்கிறார்கள். இது மக்கள் மத்தியில் இன்னும் பதட்டத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த பிரச்சனை பெரிதானத்தை அடுத்து தற்போது இவர்கள் வாபஸ் பெறப்பட்டு இருக்கிறார்கள். படை குவிக்கப்பட்டது, வாபஸ் பெறப்பட்டது எதற்கும் இப்போதுவரை காரணம் தெரிவிக்கப்படவில்லை.
-
விஜய்க்கு எதிராக பெரம்பூர், திருச்சியில் கிழக்கில்.. களமிறங்கும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் யார்? -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
அரசியலன்னா இதுதான்.. எப்போ என்ன நடக்கும்னே தெரியாது.. ஸ்டாலின் டிக் அடித்த பெயர்.. பலர் ஷாக் -
இதுவரை திமுக ஜெயிக்காத.. கோவை தெற்கு தொகுதியைத் கேட்டு வாங்கிய செந்தில் பாலாஜி.. என்ன காரணம்? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
ஜெயலலிதா ஸ்டைலை பின்பற்றும் விஜய்! ‘டபுள் தொகுதி’ ஃபார்முலாவை கையில் எடுத்தது ஏன்? இதுவரை யார் யார்? -
திமுக தேர்தல் அறிக்கை LIVE: மகளிர் உரிமை தொகை, புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் தொகை உயர்வு! -
மத்தி, சென்னையை கிளீன் ஸ்வீப் செய்யும் திமுக! தெற்கு, வடக்கில் ட்விஸ்ட்! அப்போ அரியணை? வெளியான சர்வே -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
விஜய்க்கு சத்தமின்றி எடப்பாடி வைத்த செக்.. சம்பவம் பண்ணிட்டாரே.. ஸ்டாலினும் விடலையே.. கேம் ஓவர்? -
தவெகவில் யார் யார் போட்டி? 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள்.. விஜய்யின் நண்பர் ஸ்ரீநாத்துக்கும் சீட்












Click it and Unblock the Notifications