For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ராகு-கேது பெயர்ச்சி: திருநாகேசுவரம், கீழப்பெரும்பள்ளத்தில் இன்றுமுதல் லட்சார்ச்சனை

By Mayura Akilan
Google Oneindia Tamil News

கும்பகோணம்: ஜனவரி 8ம் தேதி நடைபெற உள்ள ராகு-கேது பெயர்ச்சி விழாவையொட்டி திருநாகேசுவரம் மற்றும் கீழப்பெரும்பள்ளம் கோயில்களில் லட்சார்ச்சனை, சிறப்பு பூஜைகளுக்கான ஏற்பாடுகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.

நவகிரகங்களில் குரு, சனி பெயர்ச்சி போல ராகு - கேது இடப்பெயர்ச்சி முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. ராகு பகவான் கன்னி ராசியில் இருந்து சிம்ம ராசிக்கும், கேது பகவான் மீன ராசியில் இருந்து கும்ப ராசிக்கும் வருகிற 8ம் தேதி இடப்பெயர்ச்சி அடைகின்றனர்.

ஒன்றரை வருடங்களுக்கு ஒருமுறை நடைபெறும் ராகுகேதுப் பெயர்ச்சி இம்முறை திருக்கணிதப்படி 29-1-2016 அன்றும் வாக்கியப் பஞ்சாங்கப்படி அதற்கு முன்னதாகவே 8-1-2016 அன்றும் நடக்க இருக்கிறது. தமிழ்நாட்டைத் தவிர்த்து இந்தியாவின் பிற மாநிலங்களிலும் உலகம் முழுக்கவும் இந்த பஞ்சாங்க வேறுபாடுகள் களையப்பட்டு திருக்கணிதப் பஞ்சாங்கமே பின்பற்றப்பட்டு வரும் நிலையில் தமிழ்நாட்டில் மட்டும் சில மாவட்டங்களில் வாக்கியப் பஞ்சாங்கம் வழக்கில் இருக்கிறது.

தமிழ்நாட்டுத் திருக்கோவில்களிலும் வாக்கியப் பஞ்சாங்கப்படியே சனி குரு ராகுகேதுப் பெயர்ச்சிகள் கொண்டாடப்படுகின்றன. இம்முறை ராகுகேதுக்களின் மாற்றம் கன்னி, மற்றும் மீன வீடுகளில் இருந்து சிம்மம் மற்றும் கும்ப வீடுகளுக்கு நடக்க இருக்கிறது. ராகு இம்முறை மாற இருக்கும் சிம்மத்தின் அதிபதி சூரியன் ராகுவிற்கு பகைவர் என்பதால் சிம்மராகு பொதுவாக நன்மைகளைச் செய்ய மாட்டார் என்று நமது மூலநூல்கள் குறிப்பிடுகின்றன.

இம்முறை ஒரு சிறப்பு நிகழ்வாக பெயர்ச்சியின் ஆரம்பம் முதல் அடுத்த ஆகஸ்டுமாதம் வரை சுபக்கிரகமான குருபகவானுடன் ராகு இணைவதால் ராகுவின் பாபத்தன்மை நீங்கப் பெற்று முதல் ஏழுமாதங்கள் உலகத்தினருக்கு நல்லபலன்களையே தருவார். கேதுபகவான் மாற இருக்கும் கும்பம் அவருக்கு மிகவும் பிடித்த நட்பு வீடு என்பதாலும் குருவின் பார்வை முதல் ஏழுமாதங்களுக்கு கேதுவிற்கு இருப்பதாலும் அவரும் சுபத்தன்மை பெற்றவராகிறார். எனவே இம்முறை ராகுகேதுப் பெயர்ச்சி பொதுவாக நன்மைகளையே அதிகம் செய்யும்.

ஸ்ரீகாளஹஸ்தி

ஸ்ரீகாளஹஸ்தி

தொண்டைமண்டலம் எனப்படும் சென்னையைச் சுற்றி உள்ளவர்களுக்கு ஸ்ரீகாளஹஸ்தி மிகச்சிறந்த பரிகாரஸ்தலம். அதேபோல காஞ்சிபுரம் பஸ்நிலையம் அருகில் உள்ள அருள்மிகு சித்திரகுப்தன் ஆலயம் கேதுபகவானுக்கு மட்டுமென உள்ள கண்கண்ட பரிகாரஸ்தலம் கேதுவின் அதிதேவதை சித்திரகுப்தன் என்பதால் ஒருவரின் ஜாதகத்தில் கேதுவால் ஏற்படும் புத்திர களத்திர தோஷங்களைப் போக்கும் வல்லமை இத்திருக்கோவிலுக்கு உண்டு.

திருநாகேஸ்வரம் ராகு பகவன்

திருநாகேஸ்வரம் ராகு பகவன்

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகேயுள்ள திருநாகேசுவரத்தில் நவக்கிரக தலங்களில் ஒன்றான ராகு தலமான நாகநாத சாமி கோயில் உள்ளது. இக்கோயிலின் வெளிப்பிரகாரத்தில் தென்மேற்கு மூலையில் ராகு பகவான் தனது இருதேவியருடன் அருள்பாலிக் கிறார்.

இக்கோயிலில் மங்கள ராகு வாக எழுந்தருளி, தன்னை வணங்கு பவர்களுக்கு காலசர்ப்பதோஷம், சர்ப்பதோஷம், களத்திரதோஷம், புத்திரதோஷம் ஆகியவைகளை நீக்கி அருள்பாலிக்கிறார். இங்கு ராகுவின் மேனியில் பாலாபிஷேகம் செய்யும்போது பால் நீலநிறமாக மாறுவது சிறப்பு.

ராகுபகவானுக்கு பரிகாரம்

ராகுபகவானுக்கு பரிகாரம்

ராகு பகவான் வரும் 8ம் தேதி நண்பகல் 12.37 மணிக்கு கன்னி ராசியிலிருந்து சிம்ம ராசிக்கு பெயர்ச்சி அடை கிறார். இதையொட்டி மேஷம், ரிஷபம், கடகம், சிம்மம், கன்னி, விருச்சிகம், மகரம், கும்பம் போன்ற ராசிக்காரர்கள் பரிகாரம் செய்துகொள்வது நல்லது எனக் கூறப்படுகிறது.

சிறப்பு லட்சார்ச்சனை

சிறப்பு லட்சார்ச்சனை

ராகு பகவானுக்குஇன்று ஜனவரி 4 முதல் 6-ம் தேதி வரை முதல்கட்டமாகவும், ஜனவரி 11ம் தேதி முதல் 14ம் தேதி வரை 2வது கட்டமாகவும் லட்சார்ச்சனை நடைபெறுகிறது.

திருநாகேஸ்வரத்தில் பூஜை

திருநாகேஸ்வரத்தில் பூஜை

8ம் தேதி ராகு பகவானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு, பகல் 12.37 மணிக்கு மகா தீபாராதனை நடைபெறுகிறது. அன்று மாலை வெள்ளி ரிஷப வாகனத்தில் ராகு பகவான் வீதியுலா நடைபெறுகிறது.

கீழப்பெரும்பள்ளம் கேது பகவான்

கீழப்பெரும்பள்ளம் கேது பகவான்

நாகை மாவட்டம் பூம்புகார் அருகேயுள்ள கேது தலமான கீழப் பெரும்பள்ளத்தில் நாகநாதசாமி கோயிலில் தனி சன்னதியில் வீற்றிருந்து அருள் பாலிக்கிறார் கேதுபகவான். இவரை வழிபட்டால் திருமணத் தடை, புத்திர தோஷம் நீங்கி, செல்வ செழிப்பு, நீதிமன்ற வழக்கு களில் வெற்றி கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

மீனம் டூ கும்பம்

மீனம் டூ கும்பம்

ஜனவரி 8ம் தேதி பகல் 12.37 மணிக்கு கேது பகவான் மீன ராசியிலிருந்து கும்ப ராசிக்கு இடம் பெயர்கிறார். இதையொட்டி அன்று காலை விநாயகர் பூஜையுடன் யாக சாலை பூஜைகள் தொடங்குகின்றன. தொடர்ந்து கேது பரிகார வேள்வி நடைபெறுகிறது. பகல் 12.37 மணிக்கு பெயர்ச்சி அபிஷேகம், தீபாராதனை நடை பெறுகிறது.

யார் யார் பரிகாரம் செய்வது?

யார் யார் பரிகாரம் செய்வது?

ரிஷபம், விருச்சிகம், மிதுனம், கடகம், சிம்மம், மகரம், கும்பம், மீனம் போன்ற ராசிக்காரர் கள் பரிகாரம் செய்துகொள்வது நல்லது எனக் கூறப்படு கிறது.
இதற்கான ஏற்பாடுகளை அற நிலையத் துறை அதிகாரிகள் மற்றும் கோயில் நிர்வாகிகள் செய்துள்ளனர்.

திருப்பாம்புரம் கோவில்

திருப்பாம்புரம் கோவில்

திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே உள்ள திருப்பாம்புரத்தில் சேஷபுரீஸ்வரர் கோவில் உள்ளது. பாடல் பெற்ற இந்த கோவிலில் ராகு-கேது பகவான் தனி சன்னதியில் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர். இந்த கோவிலுக்கு பாம்புபுரம், தென்காளகஸ்தி என பல்வேறு சிறப்புப்பெயர்கள் உண்டு. ராகு - கேது பெயர்ச்சியை முன்னிட்டு வரும் 8ம் தேதி இந்த கோவிலில் ராகு-கேது பெயர்ச்சி விழா நடைபெறுகிறது. முன்னதாக வருகிற 7ம் தேதி முதல் 9ம் தேதி வரை கோவில் நிர்வாகம் சார்பில் சிறப்பு யாகம், அபிஷேகம், லட்சார்ச்சனை ஆகியவை நடக்கிறது.

பிரளயநாத சிவன் கோவில்

பிரளயநாத சிவன் கோவில்

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி வட்டம், சோழவந்தானில் உள்ள அருள்மிகு பிரளயநாத சிவன் கோயிலில், ஜனவரி 8ம் தேதி மாலை 5 மணிக்கு ராகு, கேது பெயர்ச்சி விழா நடைபெறுகிறது. 8ம் தேதி மாலை 5 மணிக்கு ராகு, கேது ப்ரீத்தி ஹோமங்கள் வேதியர்களால் நடத்தப்படுகிறது. இக் கோயிலானது ராகு ஸ்தலமாக கருதப்படுவதால், நவகிரகம், பிரளயநாத சுவாமி ஆகியோருக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட உள்ளது.

English summary
Rahu and Ketu affect all with their transits. During January 8, 2016, Lord Rahu Bhagavan and Lord Ketu Bhagavan will change signs. Shadow planets Rahu and Ketu are ever retrograde in their motion. Forever chasing Sun and Moon in order that they might avenge their beheading by Sun and Moon after the Churning of the Ocean.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X