Breaking News: சென்னையில் விட்டு விட்டு மழை- கடும் போக்குவரத்து நெரிசல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை நகரில் இன்று மாலை விட்டு விட்டு மழை பெய்கிறது. இதனால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

Rain chance for Tamilnadu today - Live

Jun 15, 2018, 8:22 pm IST

காஷ்மீரில் பத்திரிக்கையாளர் கொல்லப்பட்டது பயங்கரவாதிகளின் கோழைத்தனமான செயல் - பிரகாஷ் ஜவடேகர்

பத்திரிக்கையாளர் சுஜாத் புஹாரி கொல்லப்பட்டது வருத்தம் அளிக்கிறது- பிரகாஷ் ஜவடேகர்

Jun 15, 2018, 7:54 pm IST

சென்னை பெருங்களத்தூரில் லாரி மோதி கல்லூரி மாணவர்கள் 2 பேர் பலி

மாணவர்கள் சதீஷ், பார்த்திபன் சம்பவ இடத்திலேயே பலி

விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுநர் கைது

Jun 15, 2018, 6:44 pm IST

சென்னையின் பல பகுதிகளில் மீண்டும் மழை

வளசரவாக்கம், போரூர், வடபழனி உள்ளிட்ட பகுதிகளில் மழை

கிண்டி, ஈக்காட்டுத்தாங்கள், அசோக்நகரிலும் மழை

Jun 15, 2018, 6:44 pm IST

சென்னையில் பரவலாக பெய்த மழை - பல இடங்களில் போக்குவரத்து நெரிசல்

தியாகராய நகர், வடபழனி, பூந்தமல்லி நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல்

நுங்கம்பாக்கம், அடையாறு உள்ளிட்ட இடங்களிலும் போக்குவரத்து நெரிசல் - மக்கள் அவதி

Jun 15, 2018, 6:43 pm IST

ராஜீவ் வழக்கு- 27 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் 7 பேரை விடுவிக்க வேண்டும்- ஸ்டாலின்
7 பேரை விடுதலை செய்ய மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்- ஸ்டாலின்
Jun 15, 2018, 6:43 pm IST

சென்னை-சேலம் பசுமை வழிச்சாலை அமைக்க விவசாயிகள் கடும் எதிர்ப்பு
சாலை திட்டம் அமைத்தால் தீக்குளிப்போம் என எச்சரிக்கை
Jun 15, 2018, 4:31 pm IST

தமிழகத்துக்கான காவிரி நீர் திறப்பு தொடரும்- குமாரசாமி

தமிழகத்துக்கு நேற்று இரவு 20,000 கன அடிநீர் திறப்பு

காவிரியை தமிழகம், கர்நாடகா சரிசமமாக பங்கிட்டு கொள்ளும்- குமாரசாமி

மதுரையில் கர்நாடகா முதல்வர் குமாரசாமி பேட்டி

Jun 15, 2018, 2:47 pm IST

மகாராஷ்டிராவில் தலித் சிறுவர்கள் மீது தாக்குதல்- வைரமுத்து கண்டனம்

குளிக்கவில்லையே என்று தலித்துகளை முன்பு தண்டித்தார்கள்

குளிக்கிறார்களே என்று இன்று தண்டிக்கிறார்கள்

தேசம் எழுந்து நின்று வெட்கப்பட வேண்டும்- வைரமுத்து

Jun 15, 2018, 2:28 pm IST

18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு தீர்ப்பால் தினகரனுக்கு சம்மட்டி அடி-திவாகரன்

18 எம்எல்ஏக்கள் பதவியும் பறிபோக வேண்டும் என்பதே தினகரன் எண்ணம்-திவாகரன்

Jun 15, 2018, 1:57 pm IST

தகுதிநீக்கப்பட்ட 18 பேரை கட்சியில் சேர்ப்பது குறித்து அதிமுக தலைமைதான் முடிவு செய்யும் - ஜெயக்குமார்

தினகரனையோ, அவரைச் சார்ந்தவர்களையோ எந்தக் காலத்திலும் சேர்க்கமாட்டோம் - ஜெயக்குமார்

மாற்றான் தோட்டமாக இருந்தாலும் மதிக்கும் பண்பை பெற்றவர்கள் நாங்கள் - ஜெயக்குமார்

Jun 15, 2018, 1:03 pm IST

நீலகிரி, தேனி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் கனமழை பெய்யும் - வானிலை மையம்

உள் மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கனமழை பெய்யும் - வானிலை மையம்

கடந்த 24 மணிநேரத்தில் அதிகளவாக தேவாலாவில் 7 செமீ மழை பதிவு

Jun 15, 2018, 12:44 pm IST

அணைகள் பாதுகாப்பு மசோதா- மோடிக்கு எடப்பாடி கடிதம்

அணைகள் பாதுகாப்பு மசோதாவை மறு பரிசீலனை செய்ய வலியுறுத்தல்

அணை பாதுகாப்பு மசோதாவால் மாநில உரிமைகள் பறிப்பு- எடப்பாடி

Jun 15, 2018, 11:57 am IST

புலிகளின் புலனாய்வுப் பொறுப்பாளர் பொட்டம்மான் உயிரோடு இருக்கிறார்?

சுப்பிரமணியன் சுவாமியின் ட்வீட்டால் பெரும் பரபரப்பு

ராஜீவ் கொலையில் பிரபாகரன், பொட்டம்மான் மீது குற்றச்சாட்டு

முக்கிய சதிகாரர் இத்தாலியில் இருப்பதாக சு.சுவாமி கூறுவது பொட்டம்மானைத்தானா? என பரபரப்பு

Jun 15, 2018, 11:57 am IST

ராஜீவ் கொலை வழக்கின் முக்கிய குற்றவாளி இத்தாலியில் இருக்கிறார்- சுப்பிரமணியன் சுவாமி

ராஜீவ் கொலையின் முக்கிய சதிகாரருக்கு இத்தாலியில் உடல்நலக் குறைவு- சு.சுவாமி

Jun 15, 2018, 11:57 am IST

விடுதலைப் புலிகள் இயக்கம் பயங்கரவாத இயக்கம் இல்லை- சுவிஸ் கோர்ட்

விடுதலைப் புலிகள் குற்றவியல் நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை- சுவிஸ் நீதிமன்றம்

Jun 15, 2018, 10:27 am IST

ராஜீவ் கொலை: 7 தமிழர் விடுதலை மறுக்கப்பட்டதற்கு சு.சாமி வரவேற்பு

தமிழக அரசின் தீர்மானம் சட்ட விரோதம் என்று சு.சாமி கருத்து

Jun 15, 2018, 10:17 am IST

ராஜீவ் கொலை: 7 தமிழர் விடுதலை கோரிய மனு ஜனாதிபதியால் நிராகரிப்பு

தமிழக அரசு அனுப்பிய மனுவை நிராகரித்தார் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்

Jun 15, 2018, 9:41 am IST

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது

வட கிழக்கு மாநிலங்களில் கன மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தின் சில பகுதிகளில் இன்று மழை பெய்ய வாய்ப்பு

கர்நாடகா, கேரள கடலோர பகுதிகளில் மிக கனத்த மழை பெய்யலாம்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+