தமிழகத்தில் இன்னிக்கும் கனமழை பெய்யுமாம்.. வானிலை மையம் குளு குளு அறிவிப்பு

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம், புதுச்சேரியில் வெப்பச்சலனம் காரணமாக இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் மீண்டும் வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் சென்னை உள்பட தமிழகத்தின் பல இடங்களில் அவ்வப்போது மழை பெய்து குளிர்வித்து வருகிறது.

Rainfall in TN for next 24 hours, says Met office

இந்நிலையில், வெப்பச்சலனம் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் இடியுடன் கூடிய மழைக்கு இன்று வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையைப் பொறுத்த வரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் மாலை நேரங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது என்றும் வானிலை மையம் அறிவித்துள்ளது.

மேலும், கடந்த 24 மணி நேரத்தில் செஞ்சியில் 5 செ.மீ, கள்ளக்குறிச்சியில் 4 செ.மீ மழை பெய்துள்ளது என்றும் வானிலை மையம் அறிவித்துள்ளது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Tamil Nadu and Puducherry will get a rainfall, said Chennai Meteorological Center.
Please Wait while comments are loading...