For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'படிக்காத' ரஜினியை ஒருமையில் பேசுவதுதான் 'ஹார்வார்ட்' படிப்பின் லட்சனமா மிஸ்டர் 'பொர்க்கி' சுவாமி?

ரஜினிகாந்தை ஒருமையில் பேசுவதுதான் நீங்கள் படித்த லட்சணமா என்று சுப்பிரமணியன் சுவாமியை அவரது ரசிகர்கள் வறுத்தெடுத்து வருகின்றனர்.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

சென்னை: நடிகர் ரஜினிகாந்தை ஒருமையில் பேசுவதுதான் சுப்பிரமணியன் சுவாமி போன்ற அரசியல்வாதிகளுக்கு அழகா என்று ரசிகர்கள் ஆவேசத்துடன் கேள்வி எழுப்பினர்.

தமிழகத்தில் ஊழலையும், லஞ்சத்தையும் ஒழிக்க ரஜினிகாந்த் அரசியலுக்கு வர வேண்டும் என்று ரசிகர்கள் கடந்த 21 ஆண்டுகளாக அவரை அழைத்து வந்தனர். இந்நிலையில் கடந்த மாதம் ரசிகர்களுடன் ரஜினி சந்திப்பு நிகழ்ச்சி நடத்தினார்.

அப்போது போர் வரும்போது பார்த்துக் கொள்ளலாம் என்று தெரிவித்தார். மேலும் தமிழக அரசியல் குறித்தும் கருத்து தெரிவித்தார்.இது ஆளும் கட்சியினரிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

 பாஜக வலை

பாஜக வலை

ரஜினி அரசியல் குறித்து பேச ஆரம்பித்ததிலிருந்து பாஜக அவருக்கு தூண்டில் போட்டு கொண்டிருக்கிறது. பாஜக தேசிய தலைவர் அமித்ஷாவே ரஜினிக்காக கதவுகள் திறந்திருக்கின்றன என்றார். அதேபோல் பொன்.ராதாகிருஷ்ணனும், தமிழிசையும் அழைப்பு விடுத்தனர்.

 சு.சுவாமி மாறுபட்ட கருத்து

சு.சுவாமி மாறுபட்ட கருத்து

இவ்வாறு பாஜக தலைவர்கள் மாறி மாறி ரஜினிகாந்தை அழைத்து வரும் நிலையில் பொர்க்கி புகழ் சுப்பிரமணியன் சுவாமியோ முரண்பட்ட கருத்துகளையே தெரிவித்து வருகிறார். ரஜினிகாந்த் ரசிகர்களை சந்தித்து அரசியல் பேசிய ஓரிரு நாள்கள் கழித்து சு.சுவாமி கூறுகையில், ரஜினிக்கென ஒரு கொள்கை கிடையாது. அவர் தமிழர் இல்லை. கர்நாடகாவில் பிறந்த மராத்தியர் அவர். அவர் அரசியலுக்கு வந்தால், கண்டிப்பாக தோல்வியடைவார் என்றார்.

 ரஜினி படிக்காதவர்

ரஜினி படிக்காதவர்

கடந்த 2 தினங்களுக்கு முன்னர் ரஜினியை சுப்பிரமணியன் சுவாமி கடுமையாக விமர்சித்துள்ளார். அப்போது ரஜினிகாந்த் அரசியலுக்கு தகுதியற்றவர். அவர்
படிக்காதவர், கொஞ்சமும் கல்வியறிவு இல்லாதவர் என்றெல்லாம் பேசியுள்ளார். மேலும் ரஜினிகாந்த் ஒரு 420 என்று தனது டுவிட்டரில் சுவாமியின் பதிவை கண்ட ரசிகர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

 ஒருமையில் பேசினார்

ஒருமையில் பேசினார்

சென்னையில் செய்தியாளர்களை இன்று சந்தித்த சுப்பிரமணியன் சுவாமியிடம் ரஜினி அரசியலுக்கு வர நீங்கள் விரும்பவில்லையா என கேட்டதற்கு ரஜினிகாந்தை ஒருமையில் பேசினார். இதற்கு ரஜினி ரசிகர்கள் கொந்தளிப்பில் உள்ளனர்.

நாகரீகம் தெரியாதவர்

இதுகுறித்து ரசிகர்கள் கூறுகையில், ஒருவர் யாராக இருந்தாலும் நாம் மரியாதை கொடுத்து பேசுவதுதான் பண்பாடு. ஆனால் அதை மறந்து கொஞ்சமும் நாகரீக்ம இன்றி உலகமே அறிந்த ரஜினியை சுப்பிரமணியன் சுவாமி ஒருமையில் பேசியது அவரது திமிர்த்தனத்தையே காட்டுகிறது.

 மிகவும் கேவலம்

மிகவும் கேவலம்

கருணாநிதி, ஜெயலலிதா, ஏன் ஏரியா கவுன்சிலர் கூட எதிர்க்கட்சியினரை இதுபோல் ஒருமையில் விமர்சித்ததில்லை. கடந்த சில நாள்களுக்கு முன்னர் சசிகலாவை புறம்போக்கு என்றார் தீபா. அதேபோல் தனது தம்பியையும் எச்சக்கல என்று தகாத வார்த்தைகளால் திட்டினார். இதை கண்ட மக்கள் முகம் சுளித்தனர். இதுதான் தீபாவின் ஒரிஜினல் முகமா என்று கேட்டனர். ஆனால் படித்தவர் என்று தன்னை பீற்றிக் கொள்ளும் சு.சுவாமியின் பேச்சு தீபாவின் பேச்சை விட தர லோக்கலாக உள்ளதாக பொதுமக்களும் கருத்து தெரிவித்துள்ளனர்.

 சந்தேகம்

சந்தேகம்

சுப்பிரமணியன் சுவாமி இத்தனை முறை ரஜினியை கேவலாக பேசியபோதெல்லாம் பாஜக தலைமையோ தமிழக தலைமையோ வாய் பொத்தி வேடிக்கை பார்க்கின்றனர். ஒரு வேளை ரஜினிகாந்த் பாஜகவில் இணைய மறுத்துவிட்டதால் பாஜகவே இதுபோன்று ரஜினியை தரலோக்கலாக பேசி அவராகவே அவரது முடிவிலிருந்து பின்வாங்கும்படி செய்ய மேற்கொள்ளும் முயற்சியா? என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. குழந்தைகளையே மரியாதையாக வாங்க போங்க என அழைக்கும் இந்த காலத்தில் உலகமே அறிந்த ஒரு மனிதரை இவ்வாறு ஒருமையில் பேசிய சு.சுவாமியை என்னவென்று சொல்வது? என்பது ரசிகர்களின் கேள்வி.

English summary
Rajinikanth fans and people condemns subramanian swamy on his abusive words on rajinikanth.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X