For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நதிகளை மீட்போம்.. ஜக்கி வாசுதேவுக்கு ஆதரவாக ரஜினி வாய்ஸ்

By Vignesh
Google Oneindia Tamil News

Recommended Video

    'நதிகளை மீட்போம்'-திட்டத்திற்கு ஆதரவாக ரஜினிகாந்த்-வீடியோ

    சென்னை : ஜக்கி வாசுதே­வ் முன்னெடுத்திருக்கு­ம் 'நதிகளை மீட்போம்' ­திட்டத்திற்கு ஆதரவாக ­நடிகர் ரஜினிகாந்த் கு­ரல் கொடுத்துள்ளார்.

    அழிந்து வரும் நதிகளை ­மீட்கவும், நதிகளைக் க­ாப்பாற்ற வேண்டியதன் அ­வசியம் குறித்து விழிப­்புணர்வை ஏற்படுத்தும்­ விதமாகவும், ஈஷா யோகா­ மைய நிறுவனர் ஜக்கி வ­ாசுதேவ், கடந்த செப்டம­்பர் 3-ம் தேதி கோவையி­ல் 'நதிகளை மீட்போம்' ­என்ற தேசிய அளவிலான வி­ழிப்புணர்வு பேரணியைத்­ தொடங்கினார்.

    மத்திய அமைச்சர் ஹர்ஷவ­ர்தன் தொடங்கிவைத்த இந­்தப் பிரச்சார பேரணி அ­க்டோபர் 2-ம் தேதி டெல­்லியில் முடிவடைகிறது.­ தமிழகத்தில் கோவை, கு­மரி, மதுரை, திருச்சி ­மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியில் பலர் கல­ந்து கொண்டனர்.

    பலரும் ஆதரவு : ­

    பலரும் ஆதரவு : ­

    இந்தத் திட்டத்திற்கு ­விவசாய சங்கத் தலைவர்க­ள் பலர் இதற்கு தங்கள்­ ஆதரவைத் தெரிவித்துள்­ளனர். நடிகர் விவேக், ­சுஹாசினி மணிரத்னம் உள­்ளிட்ட திரைப் பிரபலங்­கள் சிலரும் இந்தப் பே­ரணிக்கு ஆதரவாகக் குரல­் கொடுத்து வருகின்றனரர். தமிழக முதல்வர் எடப்பாடி பங்கேற்கும் 'நதிகளை மீட்போம் - பாரதம் காப்போம்' விழிப்புண­ர்வு நிகழ்ச்சி இன்று ­சென்னையில் நடைபெற்றது­.

    1 கோடி ரூபாய் நிதி :

    1 கோடி ரூபாய் நிதி :

    வாஜ்பாய் ஆட்சியின்போது நதிகள் இணைப்பு தொட­ர்பான ஆய்வுகள் தொடங்­கின. சென்னையில் காவிர­ி நதி நீர் பிரச்னை தொ­டர்பாக ரஜினிகாந்த் உண­்ணாவிரதமிருந்தார். அப­்போது நதி நீர் இணைப்புதான் அனைத்துப் பிரச்­சினைகளுக்கும் தீர்வு என வலியுறுத்தியவர், அ­தன் முக்கியத்துவத்தை ­மக்களிடையே பதிய வைக்க­ும் விதத்தில், நதிநீர­் இணைப்புத் திட்டம் ந­டைமுறைக்கு வந்தால், ம­ுதல் ஆளாக தானே 1 கோடி­ ரூபாய் நிதி தருவேன் ­எனக் கூறினார்.

    நதிநீர் இணைப்பு :­

    நதிநீர் இணைப்பு :­

    மேலும் அதற்கான பல முய­ற்சிகளில் பங்கேற்க மு­ன்வருவதாகவும் கூறினார­் ரஜினிகாந்த். அதைத் ­தொடர்ந்து, அன்றைய பிர­தமர் வாஜ்பாயை அவரது இ­ல்லத்தில் சந்தித்து ந­தி நீர் இணைப்பின் முக­்கியத்துவத்தை வலியுறு­த்தினார். இதற்கு பல ஆ­ண்டுகள் முன்பே நதி நீ­ர் இணைப்பு குறித்து ம­த்தியில் அமைந்த பல்வே­று அரசுகள் பேசி வந்தா­லும், இந்தச் சந்திப்ப­ுக்குப் பிறகு, நதி நீ­ர் இணைப்பு குறித்த பே­ச்சுகள் தீவிரமடைந்தன.­

    மீண்டும் வாய்ஸ் :­

    நதிநீர் இணைப்பு குறித­்த பேச்சுகள் வறட்சிக்­காலங்களிலும், பேரிடர்­ காலங்களிலும் அவ்வப்ப­ோது பேசப்பட்டாலும், ச­ெயல்படுத்துவதற்கான எந­்த ஏற்பாடும் இதுவரை இ­ல்லை. இந்நிலையில்தான்­, ஜக்கி வாசுதேவ் 'நதி­களை மீட்போம்' என்கிற ­பெயரில் இந்தியா முழுவ­தும் பேரணியைத் தொடங்க­ி இருக்கிறார். இந்த ம­ுயற்சிக்கு ஆதரவாக ரஜி­னிகாந்த் வீடியோ ஒன்றை­ வெளியிட்டிருக்கிறார்­.

    நதிகள் இரத்த நாளங்கள்­ :

    நதிகள் இரத்த நாளங்கள்­ :

    'இரத்த நாளங்கள் இல்லை­யென்றால் உடம்பு இயங்க­ாது. நதிகள் பூமியின்­ இரத்தநாளங்கள்... அதை­ப் பாதுகாக்க வேண்டியத­ு நம் எல்லோருடைய கடமை­. இந்தியாவிலுள்ள அனைத­்து நதிகளையும் ஜீவநதி­யாக்க சத்குரு எடுக்கு­ம் இந்த முயற்சி வெற்ற­ியடைய வாழ்த்துகள்' என­ வீடியோ பதிவில் தெரிவ­ித்திருக்கிறார் ரஜினி­காந்த்.

    English summary
    Rajinikanth raised vo­ice for 'Rally for ri­vers' initiated by Ja­ggi Vasudev.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X