அரசியலுக்கு வருகிறேன்.. தனிக்கட்சி தொடங்குவேன்.. ரஜினி அறிவிப்பு

Posted By:
Subscribe to Oneindia Tamil
ரஜினியின் அரசியல் வருகை ... முழு பேச்சும் இதோ

சென்னை: நடிகர் ரஜினி காந்த் தனது அரசியல் திட்டங்கள் குறித்து இன்று அறிவித்தார். தனிக்கட்சி துவங்க உள்ளதாக அவர் கூறினார். ரஜினி அறிவிப்பால் தமிழகம் முழுக்க ரசிகர்கள் தீவிர கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.

-ஆன்மீக அரசியல் என்றால் என்ன? ரஜினிகாந்த் விளக்கம்

-ஆன்மீக அரசியல் என்பது தர்மமான நியாயமான அரசியல்- ரஜினிகாந்த் பேட்டி

-தனக்கு வாழ்த்து தெரிவித்த கமல் உள்ளிட்டவர்களுக்கு ரஜினிகாந்த் நன்றி

Rajinikanth big announcement - Live

-ரஜினிகாந்த் தனது உரையை நிறைவு செய்தார்

-ரசிகர்கள் ஆரவாரத்தால் அதிர்ந்தது ராகவேந்திரா திருமண மண்டபம்

-ரஜினி அரசியல் அறிவிப்பை தொடர்ந்து தமிழகம் முழுக்க ரசிகர்கள் பட்டாசு வெடித்து, இனிப்பு கொடுத்து கொண்டாட்டம்

Rajinikanth big announcement - Live

-பழைய காலத்தில் அடுத்த நாட்டு கஜானாவை கொள்ளையடிப்பார்கள்

-இப்போ சொந்த நாட்டிலேயே, சொந்த பூமிலேயே கொள்ளையடிக்கிறார்கள்

-கட்சி சிஸ்டத்தையே மாற்ற வேண்டும், வேர், கிளை போன்ற அனைத்துமே தொண்டர்கள்-ரஜினி

-எனக்கு தொண்டர்கள் வேண்டாம், காவலர்கள் வேண்டும்-ரஜினி

-காவலர்கள் உதவியோடு ஆட்சியமைத்தால், அரசிடமிருந்து உதவிகள் மக்களை சென்றடையும்

-யார் தப்பு செய்தாலும் தட்டி கேட்கும் காவலர்கள் வேண்டும்-ரஜினி

Rajinikanth big announcement - Live

-தகுந்த பதவிக்கு தகுந்த ஆளை நியமித்து வேலை பார்க்கிறார்களா என்பதை கண்காணிப்பதே எனது வேலை-ரஜினி

-பதிவு செய்யாத மன்றங்களையும் பதிவு செய்து ஒருங்கிணைக்க வேண்டும்

-இது சினிமா இல்லை, நாம் காவலர்களாய் மாறப்போகிறோம், நாம் மட்டும் போதாதது-ரஜினி

-பெண்கள், இளைஞர்கள் அனைவரையும் நமது மன்றத்திற்கு கொண்டு வர வேண்டும்-ரஜினி

-வரும் சட்டசப்பேரவை தேர்தலில் தனிக்கட்சி ஆரம்பித்து போட்டி - ரஜினி

-கட்சியை ஆரம்பித்து தேர்தலை சந்தித்து ஆட்சியை பிடிப்பது நடுக்கடலில் முத்தெடுப்பதை போன்ற கஷ்டமானது

-ஆண்டவன் அருள், மக்கள் அன்பு, ஆதரவு இருந்தால்தான் இதை சாதிக்க முடியும்-ரஜினி

-இரண்டுமே எனக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கையுள்ளது-ரஜினி

Rajinikanth big announcement - Live

-என்னை வாழ வைத்த தமிழக மக்களுக்கு எதுவும் செய்யவில்லை என்றால் அந்த குற்ற உணர்வு என்னை துரத்தும்

-எல்லாவற்றையும் மாற்றனும், நேர்மையான, வெளிப்படையான ஆன்மீக அரசியலை கொண்டுவர வேண்டும்-ரஜினிகாந்த்

-45 வயதிலேயே எனக்கு பதவி ஆசை இல்லை

-68 வயதில் பதவி ஆசை வருமா

-அப்படி வந்தால் நான் பைத்தியக்காரன்-ரஜினி

-நான் ஆன்மீகவாதி என கூறுவதற்கு தகுதியற்றவன்

-பதவி ஆசை இருந்திருந்தால் 1996லேயே பதவி என்னை தேடி வந்தது-ரஜினி

-வரும் சட்டசப்பேரவை தேர்தலில் தனிக்கட்சி ஆரம்பித்து போட்டி - ரஜினி

-கடமையை செய், மற்றதை நான் பார்க்கிறேன் என்றார் கண்ணன்

-யுத்தம் செய், வெற்றி பெற்றால் நாடாள்வாய்

-யுத்தத்தில் தோற்றால் இறப்பாய்

-யுத்தம் செய்யாவிட்டால் கோழை என்பார்கள்-ரஜினி

-நான் அரசியலுக்கு வருவது உறுதி

-நான் பில்ட்அப் கொடுக்கவில்லை, தானாக ஆகிவிட்டது-ரஜினி

-எனக்கு அரசியல் கூட பயமில்லை, மீடியாவைை பார்த்தால்தான் பயம்-ரஜினி

-பெரிய ஜாம்பவான்களே மீடியாவை பார்த்து பயப்படுகிறார்கள், நான் குழந்தை-ரஜினி

-சோ சார் எனக்கு மீடியாவிடம் ஜாக்கிரதையாக இருங்கள் என பயம்காட்டி வைத்திருந்தார்

-இப்போது சோ இருந்திருந்தால் எனக்கு 10 யானை பலமாக இருந்திருக்கும்

-சோ ஆத்மா எனக்கு பலமாக இருக்கும்

-கட்டுப்பாடு ஒழுக்கம் இருந்தால் என்ன வேண்டுமானாலும் சாதிக்கலாம்-ரஜினிகாந்த்

-6 நாளில் 6000 ரசிகர்கள் போட்டோ ஷூட்டில் பங்கேற்றனர-ரஜினிகாந்த்

-அனைத்து ரசிகர்களும் யாருக்கும் தொந்தரவு தராமல் ஒழுக்கமாக நடந்து கொண்டனர்

-வாழ வைக்கும் தெய்வங்களான ரசிகர்களே என கூறி பேச்சைஆரம்பித்தார் ரஜினிகாந்த்

-ரசிகர்கள் முன்னிலையில் உரையை ஆரம்பித்தார் ரஜினி

-ரஜினி பேச முடியாத அளவுக்கு ரசிகர்கள் ஆரவாரம்

-ராகவேந்திரா மண்டபம் வந்த ரஜினிகாந்த்துக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு

-ரசிகர்களை பார்த்து கையசைக்கிறார் ரஜினிகாந்த்

-வழக்கமாக இன்னோவா காரில் மண்டபம் செல்லும் ரஜினிகாந்த் இன்று பிஎம்டபிள்யூ காரில் செல்கிறார்

-ரசிகர்கள் அதிகம் குவிந்துள்ளதால், 'சன் ரூஃப்' வழியாக அவர்களை பார்க்க வசதியாக காரை மாற்றினார் ரஜினி

-அரசியல் அறிவிப்பை வெளியிட்டு வீடு திரும்பும்போது ரசிகர்கள் சூழ்வார்கள் என்பதால் ஏற்பாடு?

-போயஸ் தோட்டத்திலிருந்து கிளம்பினார் ரஜினி

-இன்னும் பத்து நிமிடங்கள்தான்.. ரஜினி அறிவிப்பு

-தன்னைச் சூழ்ந்த செய்தியாளர்களிடம் ரஜினி தகவல்

-உலகம் முழுவதும் ரசிகர்கள் ரஜினி அறிவிப்புக்காக காத்திருப்பு

-கோடம்பாக்கம் ராகவேந்திரா மண்டபத்தில் ரசிகர்கள் குழுமியுள்ளனர்.

-ரசிகர்களை விட ஊடகத்தினர் பெருமளவில் மண்டபத்தில் கூடியுள்ளனர்

-இன்னும் சற்று நேரத்தில் தனது முடிவை அறிவிக்கவுள்ளார் ரஜினிகாந்த்

-சென்னை ராகவேந்திரா திருமண மண்டபத்தில் ரசிகர்கள் உற்சாகத்துடன் ஒன்று கூடியுள்ளனர்

-ரசிகர் மன்றக் கொடியுடன் ரசிகர்கள் காலை முதலே கோடம்பாக்கம் பகுதியில் காத்திருக்கின்றனர்

-அருணாச்சலம் படத்தில் ரஜினி அரசியல்வாதியாக உருவெடுக்கும் சிங்கம் ஒன்று புறப்பட்டதே பாடலும் தொடர்ந்து ஒளிபரப்பாகிறது

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Rajinikanth is all set to announce his decision today and the fans are egarly waiting for his announcement.
Please Wait while comments are loading...

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற