கருணாநிதிக்கு மெரீனா கொடுத்திருக்காவிட்டால் போராட்டத்தில் குதித்திருப்பேன் - ரஜினி ஆவேசம்
Tamilnadu
oi-Veerakumar
By Veera Kumar
Subscribe to Oneindia Tamil
சென்னை: கருணாநிதிக்கு மெரினாவில் இடம் கொடுத்திருக்காவிட்டால் நானே போராடியிருப்பேன் என்று ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
கருணாநிதி கடந்த 7-ஆம் தேதி உடல்நல குறைவால் காலமானார். அவருக்கு சினிமா துறை சார்பில் சென்னை காமராஜர் அரங்கில் நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஸ்டாலின், ரஜினி உள்ளிட்டோர் கலந்து கொண்டு கருணாநிதியின் படத்திற்கு அஞ்சலி செலுத்தினர். பின்னர் ரஜினி கூறுகையில் கருணாநிதி இல்லாத தமிழகத்தை நினைத்து பார்க்க முடியவில்லை என்றார்.
மெரீனாவில் இடம் கொடுத்திருக்காவிட்டால் நானே போராட்டத்தில் குதித்திருப்பேன். கருணாநிதியால் அரசியலுக்கு வந்தவர்கள் பல லட்சம் பேர். தமிழகம் பெரிய அடையாளத்தை இழந்துவிட்டது. 50 ஆண்டில் பல்வேறு சூழ்ச்சி, துரோகங்களை தாண்டி கட்சியை காத்தவர் கருணாநிதி என்றும் ரஜினி பேசினார்.
Aug 13, 2018, 8:58 pm IST
தமிழகம் மிகப் பெரிய அடையாளத்தை இழந்து விட்டது - ரஜினி
இனி யாரைப் பார்க்க தேசியத் தலைவர்கள் தமிழர்கள் வருவார்கள் - ரஜினி வேதனை
Aug 13, 2018, 8:41 pm IST
கருணாநிதி இல்லாத தமிழகத்தை நினைத்துப் பார்க்க முடியவில்லை - ரஜினிகாந்த்
என்றென்றும் நன்றி மறவாதவர்கள் தமிழர்கள் - ரஜினி
கருணாநிதி இறுதி நிகழ்ச்சிக்கு வந்த மக்கள் கூட்டம் அதை நிரூபித்தது - ரஜினி
கூட்டத்தைப் பார்த்து பிரமித்துப் போனேன் - ரஜினி
Aug 13, 2018, 8:41 pm IST
மெரீனாவில் இடம் கொடுத்திருக்காவிட்டால் நானே போராட்டத்தில் குதித்திருப்பேன் - ரஜினி
கருணாநிதியால் அரசியலுக்கு வந்தவர்கள் பல லட்சம் பேர் - ரஜினி
சிவாஜி, எம்ஜிஆர் ஒரே படத்தில் சூப்பர் ஸ்டார் ஆக்கியவர் கருணாநிதி - ரஜினி புகழாரம்
Aug 13, 2018, 7:08 pm IST
அதிமுக செயற்குழு கூடுகிறது
ஆகஸ்ட் 20ம் தேதி செயற்குழு கூடுவதாக அறிவிப்பு
சென்னையில் செயற்குழுக் கூட்டம் நடைபெறும்
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் கூட்டம்
ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமைக் கழக அலுவலகத்தில் செயற்குழு கூட்டம்
Aug 13, 2018, 6:08 pm IST
வார்டு மறுவரையறை செய்யாமல் உள்ளாட்சி தேர்தலை நடத்த இயலாது- மாநில தேர்தல் ஆணையம்
வார்டு மறுவரையறை செய்யாமல் தேர்தல் நடத்தக்கூடாது என உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது திமுகதான்
மாநில தேர்தல் ஆணையம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வாதம்
Aug 13, 2018, 5:43 pm IST
திமுகவை நான் உடைக்கமாட்டேன்- அழகிரி
திமுக தானாக உடையும்
திமுக சரியாக செயல்பட்டிருந்தால் ஆர்கே நகரில் டெபாசிட் இழந்திருக்குமா- அழகிரி கேள்வி
Aug 13, 2018, 5:29 pm IST
அழகிரி என்ன செய்யப்போகிறார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் - தமிழிசை
யார் மிளிரப்போகிறார்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும் - தமிழிசை
Aug 13, 2018, 5:27 pm IST
சூரியன் மறைவால் நட்சத்திரங்கள் வரபார்க்கின்றன - தமிழிசை
அழகிரியின் நடவடிக்கை குறித்து தமிழக பாஜக தலைவர் தமிழிசை கருத்து
Aug 13, 2018, 4:25 pm IST
ஸ்டெர்லைட் ஆலையில் நிர்வாக பணிகளுக்கு அனுமதிக்க கூடாது-தமிழக அரசு மேல்முறையீடு
தேசிய பசுமை தீர்ப்பாயம் வழங்கிய அனுமதிக்கு எதிராக தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு
Aug 13, 2018, 3:49 pm IST
வானிலையில் மட்டுமின்றி திமுகவிலும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்- வைகை செல்வன்
திமுகவில் உருவாகியுள்ள புயலுக்கு அழகிரி என பெயர் வைக்கலாம்- வைகைசெல்வன் கிண்டல்
Aug 13, 2018, 2:50 pm IST
திமுக தலைவர்கள் பலர் ரஜினிகாந்த்துடன் தொடர்பில் உள்ளனர்-மு.க.அழகிரி
திமுக கட்சி பதவிகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன- மு.க.அழகிரி
ஆங்கில தொலைக்காட்சி சேனலுக்கு அளித்த பேட்டியில் அழகிரி சரமாரி குற்றச்சாட்டு
Aug 13, 2018, 2:25 pm IST
நான் திமுகவுக்கு வருவதை ஸ்டாலின் விரும்பவில்லை- அழகிரி
திமுகவை அழிக்க நினைப்பவர்களை கருணாநிதியின் ஆத்மா தண்டிக்கும்
கட்சியில் இல்லாத ஒருவரின் கருத்துக்கு நான் பதில் கூறமுடியாது
Aug 13, 2018, 1:25 pm IST
தீவிர அரசியலிலிருந்து ஓய்வு பெறுவதாக தேவெ கெளடா அறிவிப்பு
2019 நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட மாட்டேன் என அறிவிப்பு
தேவெ கெளடா அறிவிப்பால் கர்நாடகாவில் பரபரப்பு
கருணாநிதி மறைந்தபோது பெரும் சோகத்துடன் அஞ்சலி செலுத்த வந்திருந்தார் கெளடா
தேவெ கெளடா பிரதமராவதற்கு கருணாநிதி பெரும் உதவியாக இருந்தார் என்பது நினைவிருக்கலாம்
Aug 13, 2018, 1:13 pm IST
வடமேற்கு வங்ககடல் பகுதியில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி
கர்நாடக பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது-சென்னை வானிலை ஆய்வு மையம்
பொள்ளாச்சியில் அதிகபட்சமாக 10 செ.மீ மழை
அடுத்த 2 நாட்களுக்கு மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம்- வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
Aug 13, 2018, 12:48 pm IST
கோபாலபுரம் இல்லத்திற்கு ஸ்டாலினை சந்திக்க சென்றார் அழகிரி
கருணாநிதி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திவிட்டு கோபாலபுரம் சென்றார்
கோபாலபுரம் இல்லத்தில் ஸ்டாலினை சந்திக்கிறார்
Aug 13, 2018, 12:40 pm IST
கட்சி ரீதியான ஆதங்கம் பற்றி 2 அல்லது 3 நாட்களில் சொல்கிறேன்- மு.க. அழகிரி
சென்னை கோபாலபுரத்தில் அழகிரி பதில்
கட்சியில் பிளவு தொடங்கிவிட்டதா என்ற கேள்விக்கு நான் கட்சியில் இல்லை என்று அழகிரி பதில்
Aug 13, 2018, 12:37 pm IST
ஸ்டெர்லைட் ஆலை ரூ.750 கோடி இழப்பீடு வழங்க கோரிய வழக்கில் ஹைகோர்ட் நோட்டீஸ்
மத்திய, மாநில அரசுகள், வேதாந்தா குழுமம் 2 வாரங்களில் பதிலளிக்க ஹைகோர்ட் நோட்டீஸ்
ஹைகோர்ட் மதுரை கிளையில் மனுதாரர் விஜய் நிவாஸ் தொடர்ந்த வழக்கில் உத்தரவு
துப்பாக்கி சூட்டால் பலியான குடும்பங்களுக்கு தலா 10 கோடி வழங்க மனுவில் கோரிக்கை
எஞ்சிய தொகைகளை ஸ்டெர்லைட் ஆலையால் ஏற்பட்ட பாதிப்புகளை சீரமைக்க பயன்படுத்த வேண்டும்
Aug 13, 2018, 11:34 am IST
அதிமுகவில் இருந்து அண்ணா தொழிற்சங்க முன்னாள் நிர்வாகி சின்னசாமி நீக்கம்
Aug 13, 2018, 11:09 am IST
திமுக விசுவாசிகள் எனக்கு ஆதரவாக உள்ளனர்- அழகிரி
எனது ஆதங்கம் கட்சி தொடர்பானது- அழகிரி
செயற்குழு பற்றி என்னிடம் கேட்காதீர்கள்-அழகிரி
மீண்டும் இணைவது குறித்து எனக்கு தெரியாது-அழகிரி பரபரப்பு பேட்டி
Aug 13, 2018, 11:08 am IST
தந்தையிடம் எனது ஆதங்கத்தை வேண்டினேன்-அழகிரி
Aug 13, 2018, 11:04 am IST
கருணாநிதி நினைவிடத்தில் மு.க.அழகிரி குடும்பத்தோடு அஞ்சலி
Aug 13, 2018, 10:03 am IST
சோம்நாத் சட்டர்ஜியின் மறைவுக்கு பிரதமர், குடியரசுத் தலைவர் இரங்கல்
சோம்நாத் சட்டர்ஜியின் மறைவு நாட்டுக்கு பேரிழப்பு - குடியரசுத் தலைவர்
இந்திய அரசியலில் சிறந்து விளங்கியவர் சோம்நாத் சட்டர்ஜி - பிரதமர்
Former MP and Speaker Shri Somnath Chatterjee was a stalwart of Indian politics. He made our Parliamentary democracy richer and was a strong voice for the well-being of the poor and vulnerable. Anguished by his demise. My thoughts are with his family and supporters.
லோக்சபா முன்னாள் சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜி காலமானார்
உடல்நலக்குறைவால் காலமான சோம்நாத் சட்டர்ஜிக்கு வயது 89
கொல்கத்தா தனியார் மருத்துவமனையில் சோம்நாத் சட்டர்ஜியின் உயிர் பிரிந்தது
9:32 AM, 13 Aug
தமிழகத்தில் பயங்கரவாத சக்திகள் இருப்பதாக பிரதமர் மோடி குற்றச்சாட்டு
நல்ல திட்டங்கள் பற்றி அப்பாவி மக்கள் மனதில்அச்சத்தை உருவாக்க பயங்கரவாத சக்திகள்முயற்சி
ரஜினி கட்சி தொடங்கினால் பாஜக கூட்டணி அமைக்குமா என்ற யூகங்களுக்கு பதிலளிக்க விருப்பமில்லை
9:32 AM, 13 Aug
ரஜினிகாந்தை அவருடைய சாதனைகளுக்காக மதிக்கிறேன்
தமிழகத்தில் பாஜகவுக்கான ஆதரவுத்தளம் தற்போது அதிகரித்துக் கொண்டிருக்கிறது
கடுமையாக உழைத்தால் தமிழகத்தில் நல்ல வெற்றிகளை பாஜக பெறமுடியும்- மோடி
10:03 AM, 13 Aug
சோம்நாத் சட்டர்ஜியின் மறைவுக்கு பிரதமர், குடியரசுத் தலைவர் இரங்கல்
சோம்நாத் சட்டர்ஜியின் மறைவு நாட்டுக்கு பேரிழப்பு - குடியரசுத் தலைவர்
இந்திய அரசியலில் சிறந்து விளங்கியவர் சோம்நாத் சட்டர்ஜி - பிரதமர்
Former MP and Speaker Shri Somnath Chatterjee was a stalwart of Indian politics. He made our Parliamentary democracy richer and was a strong voice for the well-being of the poor and vulnerable. Anguished by his demise. My thoughts are with his family and supporters.