அரசியல் அறிவிப்பையடுத்து அதிரடி.. வாக்காளர்களை ஒருங்கிணைக்க வெப்சைட் தொடங்கினார் ரஜினிகாந்த்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
  02-01-18 News Wallet காலை செய்திகள்- வீடியோ

  சென்னை: அரசியல் மாற்றத்தை விரும்புவோர் தங்களது பெயரை பதிவு செய்ய புதிய இணையதளத்தை ரஜினிகாந்த் தொடங்கினார்.

  ரஜினிகாந்த் ஆண்டு இறுதியான நேற்று அரசியலுக்கு வருவது உறுதி என்றும் 234 தொகுதிகளில் தனித்து போட்டி என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

  இந்நிலையில் அவர் உள்ளாட்சி தேர்தலில் காலம் குறைவாக இருப்பதால் அதில் போட்டியிடவில்லை. எனவே நாடாளுமன்றத் தேர்தலின்போது ஒரு முடிவெடுத்து சட்டசபை தேர்தலில் நிச்சயம் போட்டியிடுவோம் என்று அவர் கூறியிருந்தார்.

  புத்தாண்டு வாழ்த்துகள்

  புத்தாண்டு வாழ்த்துகள்

  இதற்கு பலர் ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்து வந்தனர். இந்நிலையில் இன்று காலையில் போயஸ் கார்டன் இல்லத்துக்கு வந்த ரசிகர்களை நேரில் சந்தித்து புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்தார்.

  புத்தாண்டு நல்வாழ்த்துகள்

  புத்தாண்டு நல்வாழ்த்துகள்

  தற்போது எந்தவித முன்னறிவிப்பும் இன்றி, www.rajinimandram.org என்ற இணையதளத்தை தொடங்கி டுவிட்டரில் வீடியோவை ரஜினி வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் ரஜினி கூறுகையில், அனைவருக்கும் எனது புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

  ரஜினி ரசிகர்கள்

  ரஜினி ரசிகர்கள்

  அரசியல் பிரவேசத்தை வரவேற்ற அனைத்து மக்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். ஒரு முக்கிய அறிவிப்பு, எனது பதிவு செய்யப்பட்ட ரஜினிகாந்த் ரசிகர் மன்ற உறுப்பினர்களையும், பதிவு செய்யப்படாத ரசிகர் மன்ற உறுப்பினர்களையும் தமிழகத்தில் ஒரு நல்ல அரசியல் மாற்றத்தை கொண்டு வர விரும்பும் மக்களையும் ஒருங்கிணைத்து ஒரு குடைக்குள் கொண்டு வரவேண்டும்.

  நல்ல அரசியல் மாற்றம்

  நல்ல அரசியல் மாற்றம்

  அதற்காக www.rajinimandram.org என்ற இணையதளத்தை உருவாக்கியுள்ளேன். அதில் உங்களது பெயர், வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றை பதிவு செய்து உறுப்பினராகலாம். தமிழ்நாட்டில் ஒரு நல்ல அரசியல் மாற்றத்தை கொண்டு வரலாம். வாழ்க தமிழக மக்கள், வளர்க தமிழ்நாடு என்று கூறியுள்ளார். மேலும் மொபைல் ஆப் ஒன்றும் தொடங்கப்பட்டுள்ளது.

  https://drive.google.com/file/d/1SkXCPgSq85z8CjyuPsF1GIFOoHsHMYmT/view?usp=sharing

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Rajinikanth has started a new website called www.rajinimandram.org to those who wants change in politics can register their name.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற