யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம்... ரஜினி நல்ல மனிதர் - ஓபிஎஸ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதில் தவறில்லை என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கூறியுள்ளார்.

சென்னையில் ரசிகர்கள் மத்தியில் பேசிய நடிகர் ரஜினிகாந்த் தமிழகத்தில் அரசியல் நிலவரம் நன்றாக இல்லை என குறிப்பிட்டு இருந்தார். சில தலைவர்களின் பெயரையும் குறிப்பிட்டு பேசினார்.

டெல்லியில் இன்று செய்தியாளரிடம் பேசிய முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்திடம் தமிழக அரசியலில் வழுவான தலைமை இல்லை என ரஜினி கூறிஉள்ளாரே என கேள்வி எழுப்பட்டது.

ஓபிஎஸ் பதில்

ஓபிஎஸ் பதில்

அதற்கு பதில் சொன்ன பன்னீர்செல்வம், ரஜினிகாந்த் மிகவும் நல்ல மனிதர், சிறந்த ஆன்மீகவாதி. நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரலாம், ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம்.

மக்கள் தீர்ப்பு

மக்கள் தீர்ப்பு

யார் அரசியலுக்கு வந்தாலும் ஏற்றுக்கொள்ளக் கூடியவர்கள் தமிழக மக்கள். மக்கள்தான் எஜமானர்கள் அவர்கள்தான் தீர்ப்பளிக்க வேண்டும்.

அதிமுகவிற்கு பதிப்பு இல்லை

அதிமுகவிற்கு பதிப்பு இல்லை

நடிகர் ரஜினிகாந்தின் வருகை, அதிமுகவை எந்த விதத்திலும் பாதிக்காது என்று உடனிருந்த கேபி முனுசாமி கூறினார். தமிழக அரசியல் தலைமையில் ஒரு வெற்றிடம் உருவாகி உள்ளது என்பது உண்மைதான், அதனை நிரப்பும் தலைவராக ஓ.பன்னீர்செல்வம் உள்ளார்.

பிரச்சினை புரியும்

பிரச்சினை புரியும்

ரஜினி அரசியலுக்கு வந்தால் அதிமுக எனும் ஆலமரத்திற்கு எந்த பாதிப்பும் இல்லை. அரசியலுக்கு வந்தால்தான் களத்தில் இருக்கும் பிரச்னை தெரியும் என்றார். அந்த பிரச்சினைகள் என்ன என்று களத்தில் இறங்கி பார்க்க வேண்டும் என்றும் கூறினார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
O.Paneerselvam maintained that Rajinikanth entering politics would make no difference to the AIADMK. Rajinikanth is a good human being and there is nothing wrong in his entering politics. But his entry will not make difference to the AIADMK Panneerselvam said.
Please Wait while comments are loading...