For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

"பாட்ஷா"வைச் சந்தித்தார் "வில்லன்" ஆனந்தராஜ்!

By Veera Kumar
Google Oneindia Tamil News

சென்னை: பரபரப்பான அரசியல் சூழ்நிலைக்கு நடுவே, நடிகர் ஆனந்தராஜ், ரஜினிகாந்த்தை சந்தித்து பேசியுள்ளார்.

ரஜினிகாந்த் அரசியலுக்கு வர உள்ளதாக தகவல்கள் வெளியாகியபடி உள்ளன. இது தொடர்பாக மூத்த பத்திரிகையாளர்களிடம் அவர் சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளார். புகைப்படங்களுடன் அந்த தகவல் லீக்காகியுள்ளது.

இந்த நிலையில், அதிமுகவில் பிரசார பீரங்கியாக இருந்தவரும், ஜெயலலிதா மறைவுக்கு பிறகு சசிகலா அணியை கடுமையாக சாடி பேசிவருபவருமான நடிகர் ஆனந்தராஜ், ரஜினியை அரசியல் குறித்து பல விமர்சனங்களை கூறி வரும் நடிகர் ஆனந்த்ராஜ் இன்று நடிகர் ரஜினியை சந்தித்து பேசினார்.

சிஸ்டம் சரியில்லை

சிஸ்டம் சரியில்லை

கடந்த சில நாட்களுக்கு முன்னர் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்தார் ரஜினி. அப்போது ரசிகர்கள் மத்தியில் பேசுகையில் எவ்வளவோ திறமைசாலிகள் இருந்தாலும் தமிழகத்தில் சிஸ்டம் சரியில்லையே, ஜனநாயகம் கெட்டு கிடக்கிறதே என்று தெரிவித்தார் ரஜினி.

போர் பிரகடனம்

போர் பிரகடனம்

மேலும், அரசியலில் ஈடுபடுவது என்பதை ஆண்டவன் தீர்மானிப்பான் என்றார். அதேநேரம், போர் வரும்வரை ரெடியாக இருக்கும்படியும், போர் வரும்போது பார்த்துக்கொள்ளலாம் என்றும் ரஜினி தனது பேச்சின்போது குறிப்பிட்டார்.

சந்திப்பு

சந்திப்பு

இதையடுத்து ரஜினி அரசியலுக்கு வருவதற்கு சிலர் ஆதரவாகவும், எதிராகவும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் நடிகர் ஆனந்த்ராஜ், ரஜினியை அவரது போயஸ்கார்டன் இல்லத்தில் சந்தித்து பேசியது முக்கியத்துவம் பெறுகிறது.

நல்ல காலம் பிறக்குது

நல்ல காலம் பிறக்குது

ரஜினியின் அடுத்தடுத்த நகர்வுகள், அடுத்தமாதமே ரஜினி ஏதேனும் புதிய முடிவை அறிவிக்க வாய்ப்பிருப்பதாக ரசிகர்களை நம்ப செய்வதாக உள்ளது. இந்த காலகட்டத்தை விட்டால் ரஜினி அரசியலில் களமிறங்க வேறு காலகட்டம் இல்லை என்பது இதற்கு ஒரு முக்கிய காரணமாக இருக்கும்.

English summary
Actor Rajinikanth met with former AIADMK star speaker and actor turn politician Anandraj and discuss his political plan.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X