சிவாஜிக்கு மணிமண்டபம்.. முதல்வருக்கு நடிகர்கள் ரஜினிகாந்த், பிரபு மற்றும் தமிழ்த்திரையுலகம் பாராட்டு
சென்னை : மறைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு தமிழக அரசு சார்பில் மணிமண்டபம் கட்டப்படும் என்று முதல்-அமைசசர் ஜெயலலிதா சட்டசபையில் அறிவித்துள்ளதற்கு நடிகர்கள் ரஜினிகாந்த், பிரபு ஆகியோர் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
சிவாஜி கணேசனுக்கு சென்னையில், தமிழக அரசு சார்பில் மணிமண்டபம் அமைக்கப்படும் என்று சட்டசபையில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா அறிவித்தார்.

இதற்கு வரவேற்பு தெரிவித்து தனது ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள நடிகர் ரஜினிகாந்த், மதிப்புக்குரிய நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு மணிமண்டபம் கட்ட முன் வந்திருக்கும் தமிழக அரசுக்கு என் மனமார்ந்த நன்றி மற்றும் பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
இதே போன்று சிவாஜி கணேசனின் மகனும், நடிகருமான பிரபுவும் தமிழக அரசை பாராட்டியுள்ளார்.
நடிகர் பிரபு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது...
எங்கள் தந்தை சிவாஜி கணேசனுக்கு மணிமண்டபம் கட்டப்படும் என்று முதல்- அமைச்சர் அறிவித்து இருப்பது எங்கள் குடும்பத்தினருக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நடிகர் திலகத்தின் லட்சக்கணக்கான ரசிகர்களும் மகிழ்ச்சியில் திளைத்துப் போய் இருக்கிறார்கள்.
எங்களின் உச்சியை குளிர வைத்த முதலமைச்சருக்கு எனது சார்பிலும், அண்ணன் ராம்குமார் சார்பிலும், மகன் விக்ரம் பிரபு சார்பிலும் மற்றும் குடும்பத்தினரின் அனைவரது சார்பிலும், ரசிகர்கள் சார்பிலும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
நடிகர் சங்க தலைவர் சரத்குமார், பொதுச் செயலாளர் ராதாரவி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது...
மறைந்த நடிகர்திலகம் சிவாஜிகணேசனுக்கு மணி மண்டபம் கட்டுவதாக முதல்-அமைச்சர் அறிவிப்பு வெளியிட்டு இருப்பது மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நடிகர் சங்கத்தின் அனைத்து உறுப்பினர்கள் சார்பிலும் முதல்வருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். நடிகர் சங்க சரித்திரத்தில் உங்களது செயல் சாதனையாக என்றும் போற்றப்படும்.இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் அதன் தலைவர் எஸ்.தாணு மற்றும் நிர்வாகிகள் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது...
''தமிழ் திரைப்பட துறை மீது என்றென்றும் பாசமும், பற்றும் கொண்ட தமிழ் திரையுலகின் தவப்புதல்வி முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஏற்கனவே எண்ணற்ற பல சலுகைகளை தமிழ் திரையுலகுக்காக செய்து வருகிறார்கள். இன்று மேலும் ஒரு வரப்பிரசாதமாக, உடல் மறைந்தாலும், தமிழர்களின் உள்ளத்தில் என்றென்றும் நீங்காமல் குடிகொண்டுள்ள நடிகர் திலகம் சிவாஜிகணேசனுக்கு மணிமண்டபம் தமிழக அரசு சார்பில் கட்டப்படும் என்று சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார்.
இது தமிழ் திரையுலகம் மட்டுமல்லாது, அனைத்து தரப்பு தமிழக மக்களையும் மகிழ்விக்கும் நிகழ்வாக அமைந்துள்ளது. தமிழ் திரையுலகின் மீது அக்கறையும், பாசமும் கொண்ட முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பாக நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications