நந்தி விருதுக்கு நன்றி.. டிவிட்டரில், ரஜினி-கமல் மாறி மாறி வாழ்த்து

Written By:
Subscribe to Oneindia Tamil
  'கங்கிராட்ஸ் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்...', 'தேங்க்ஸ் கமல்!' நந்தி விருதுக்கு நன்றி- வீடியோ

  சென்னை: நந்தி விருது வழங்கிய ஆந்திர அரசுக்கு நடிகர் ரஜினிகாந்த் நன்றி தெரிவித்துள்ளார். நந்தி விருதுக்காக வாழ்த்திய கமல்ஹாசனுக்கும் ரஜினி நன்றி கூறியுள்ளார்.

  ஒவ்வொரு ஆண்டும் தெலுங்கில் வெளியாகும் சிறந்த படங்களைத் தேர்ந்தெடுத்து ஆந்திர அரசு 'நந்தி விருதுகள்' வழங்கி வருகிறது. அத்துடன், 'என்.டி.ஆர். தேசிய விருது', உள்ளிட்ட சில சிறப்பு விருதுகளையும் வழங்கி வருகிறது.

  rajinikamal

  2014, 2015 மற்றும் 2016ம் ஆண்டுக்கான விருதுப் பட்டியல் இன்று அறிவிக்கப்பட்டது. 'என்.டி.ஆர். தேசிய விருது' 2014ஆம் ஆண்டு கமல்ஹாசனுக்கும், 2016ஆம் ஆண்டு ரஜினிகாந்துக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

  இதையொட்டி டிவிட்டரில் ரஜினிகாந்த்துக்கு கமல் வாழ்த்து தெரிவித்தார். பதிலுக்கு ரஜினிகாந்த் கமலுக்கு நன்றியும், வாழ்த்தும் தெரிவித்துள்ளார். மேலும் தனக்கு விருது வழங்கியதற்காக நன்றியும், மகிழ்ச்சியும் வெளிப்படுத்தியுள்ளார்.

  நந்தி விருது வழங்கிய ஆந்திர அரசுக்கு நடிகர் ரஜினிகாந்த் நன்றி தெரிவித்துள்ளார். நந்தி விருதுக்காக வாழ்த்திய கமல்ஹாசனுக்கும் ரஜினி நன்றி கூறியுள்ளார்.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  "I convey my heartfelt thanks and happiness for the prestigious NandiAwards granted to me" says Rajinikanth.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற