For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ராம் ஜெத்மலானியிடம் ரூ.7 கோடி மோசடி?: போலீஸ் கமிஷனரிடம் புகார்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

Ram Jethmalani
சென்னை: மூத்த வழக்கறிஞர் ராம் ஜெத்மலானியிடம் சென்னையைச் சேர்ந்த நில புரோக்கர் ஒருவர் 7 கோடி ரூபாய் நில மோசடி செய்துள்ளதாகவும், அதுபற்றி சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ராம் ஜெத்மலானி புகார் தெரிவித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

முன்னாள் மத்திய அமைச்சரான ராம்ஜெத் மலானி வெள்ளிக்கிழமை சென்னை வந்தார். மதியம் 1.45 மணி அளவில் 2 நண்பர்கள் மற்றும் 45 வயது மதிக்கத்தக்க பெண்ணுடன் போலீஸ் கமிஷனர் அலுவலகம் சென்றார்.

உயர் அதிகாரி ஒருவர் அவருக்கு தேவையான உதவிகளை செய்தார். பின்னர் உடனடியாக அவர் காரில் ஏறி புறப்பட்டார். அப்போது செய்தியாளர்கள் அவரை சூழ்ந்து கேட்டபோது, ‘‘காவல் நிலைய சீரமைப்பு கமிட்டியில் நான் உள்ளேன். அது தொடர்பாக விவாதிக்க இங்கு வந்தேன்'' என்று கூறினார்.

ஆனால் சூளை மேட்டைச் சேர்ந்த நில புரோக்கர் ஒருவர் கிழக்கு கடற்கரை சாலையில் இடம் வாங்கி தருவதாக கூறி ராம்ஜெத் மலானியிடம் ரூ.7 கோடி மோசடி செய்ததாகவும், அதுபற்றி புகார் செய்ய அவர் கமிஷனர் அலுவலகம் வந்ததாகவும் புகார் குறித்து மத்திய குற்றப்பிரிவு போலீசுக்கு கமிஷனர் உத்தர விட்டதாகவும் தகவல்கள் வெளியானது.

ஆனால் இதனை மத்திய குற்றப்பிரிவு போலீஸ் அதிகாரிகள் மறுத்தனர். ஆனாலும் மோசடி புகார் உண்மை எனவும், போலீசார் இதனை மறைக்கிறார்கள் என்றும் இன்னொரு தரப்பினர் உறுதிப்படக் கூறினர்.

English summary
Senior advocate and Member of Parliament, Ram Jethmalani visited the police commissioner’s office here on Friday, stating that he was conducting a study on police reforms throughout the country. However, city police said he approached the commissioner on personal grounds.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X