For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

எதிரும் புதிருமாக நின்றாலும்.... !

By Shankar
Google Oneindia Tamil News

Sivanthi adityan and ba ramachandra adityan
சென்னை: சில மாதங்களுக்கு முன்புதான் தமிழ்ப் பத்திரிகை உலகின் அசைக்க முடியாத தூணாகத் திகழ்ந்த டாக்டர் சிவந்தி ஆதித்தன் மறைந்தார்.

அவர் மறைந்த சில தினங்களிலேயே அவரது மூத்த சகோதரர், பத்திரிகையுலகின் இன்னுமொரு பெரும் தூண் பா ராமச்சந்திர ஆதித்தன் பிரிந்துள்ளார்.

சொந்த அண்ணன் - தம்பியாக இருந்தாலும் நிஜ வாழ்க்கையில் பல காலம் இருவரும் எதிரும் புதிருமாகவே இருந்தார்கள் என்பது மீடியா உலகம் மற்றும் அவர்கள் சார்ந்த சமூகம் தவிர பிறருக்குத் தெரியாத செய்தி.

ஆனால் பொதுவெளியில் இருவரும் ஒருவரையொருவர் விட்டுக் கொடுத்ததே இல்லை. கருத்து வேறுபாடு வேறு... உறவுக்கான மரியாதை வேறு என்பதில் அத்தனை தெளிவாக இருந்தார்கள்.

1996-ம் ஆண்டு சென்னை விஜிபியில் நடந்த அனைத்துலக நாடார் சங்க மாநாட்டில் தங்கள் வேறுபாடுகளை வெளியில் காட்டாமல் இணைந்து நின்று செயல்பட்டார்கள்.

அந்த நிகழ்ச்சிக்கான செய்திகளில் இருவரின் பேச்சுக்களுமே தினத்தந்தி மற்றும் மாலை முரசு, கதிரவனில் இடம்பெற்றன (அதற்கு முன்பு வரை சின்னவர் பேச்சு கதிரவன் - முரசில் வராது... பெரியவர் பேச்சு தந்தி - மலரில் இடம்பெறாது!).

தங்களுக்குள் இருக்கும் வேறுபாடுகள், அலுவலக பணியாளர்களிடையே இளக்காரத்தை ஏற்படுத்திவிடக் கூடாது என்பதிலும் கவனமாக இருந்தனர். மாலை முரசு ஊழியர்கள் சிவந்தி ஆதித்தனை 'சின்னய்யா' என்றுதான் மரியாதையுடன் அழைத்தனர். தினத்தந்தி ஊழியர்கள் பெரியய்யா என்றுதான் ராமச்சந்திர ஆதித்தனை அழைத்தனர்.

நிஜ வாழ்க்கையில் எதிரும் புதிருமாக இருந்தாலும், நீரடித்து நீர் விலகாது என்ற தமிழ் வழக்குப்படி பொதுவில் தங்கள் மரியாதையை காத்து நின்றது அவர்கள் சிறப்பு.

இந்த இருவரும்தான் தமிழ்ப் பத்திரிகையுலகில் முக்கியத் தூண்களாகத் திகழ்ந்தனர். வர்த்தகம் தாண்டி, தமிழருக்கான பத்திரிகைகளை முன்னெடுத்த இந்த இரு 'அய்யாக்களும்' அடுத்தடுத்து மரணத்தைத் தழுவியது, தமிழரை சோகத்துக்குள்ளாக்கியுள்ளது.

English summary
Ramachandra Adithan & Sivanthi Adithan were passed away in a very short gap.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X