இதுக்கும் "கேஸ்" போடுவாங்களோ... இது ராமதாஸின் அடுத்த "நாக் அவுட்"!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் பரவி வரும் மர்மக் காய்ச்சல் குறித்து கருத்து தெரிவித்துள்ள டாக்டர் ராமதாஸ், இதுகுறித்துப் பேசினாலும் வழக்குப பாயுமோ என்று கேட்டுள்ளார்.

Ramadoss comments on mysterious fever

முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நலம் குறித்து பேசினால், எழுதினால் வழக்குப் போடப்படுகிறது. வதந்தி பரப்புவதாக கூறி கைதும் செய்யப்படுகிறார்கள். இதுவரை 8 பேரை கைது செய்துள்ளனர். இந்த நிலையில் இதையொட்டி ஒரு டிவீட் போட்டுள்ளார் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்.

அதில், சென்னை புறநகரில் மர்மக்காய்ச்சல் வேகமாக பரவுகிறது. மேலும் ஒரு பெண் சாவு: செய்தி - இதுபற்றி பேசினாலும் வதந்தி நடவடிக்கை பாயுமோ? என்று கேட்டுள்ளார் டாக்டர் ராமதாஸ்.

அதேபோல இன்னொரு டிவீட்டில் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் காதலிக்க வலியுறுத்தி பெண்ணுக்கு அடி-உதை: பண்பாட்டைக் கற்றுத்தர வேண்டிய நூலகத்தின் பரிதாப நிலையை பாருங்கள்! என்று அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடந்த ஒரு காதல் சண்டை குறித்தும் கருத்து வெளியிட்டுள்ளார் ராமதாஸ்.

இது அல்டிமேட்!
அடுத்து லேட்டஸ்டாக அவர் போட்டுள்ள டிவீட். இன்று நடந்த தமிழக அரசின் அமைச்சரவைக் கூட்டம். அதில், அதிமுக ஆட்சிக்கு வந்த 6 மாதங்களில் இரண்டாவது அமைச்சரவைக் கூட்டம்: தமிழக அரசு எவ்வளவு வேகமாக செயல்படுகிறது பாருங்கள்! என்று நக்கலடித்துள்ளார் ராமதாஸ்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
PMK founder Dr Ramadoss has commented on mysterious fever which is spreading in Chennai and its ourskirts in a Tweet today.
Please Wait while comments are loading...