ராம்குமார் மட்டும்தான்.. வேறு யாரும் இல்லை.. போலீஸ் திட்டவட்ட நம்பிக்கை!
சென்னை: சுவாதி கொலை வழக்கில் ராம்குமார் மட்டும்தான் சம்பந்தப்பட்டுள்ளார். அவர் மட்டுமே திட்டம் தீட்டி செயல்படுத்தியுள்ளார் என்று போலீஸ் தரப்பில் உறுதிபடக் கூறுகிறார்கள்.
சாப்ட்வேர் என்ஜீனியர் சுவாதி கொலை வழக்கில் கைதாகியுள்ள ராம்குமார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை ஒரு முறை 3 நாள் காவலில் எடுத்து போலீஸார் விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்றுள்ளனர். அப்போது, தான்தான் கொலை செய்ததாக ராம்குமார் ஒப்புக் கொண்டதாக போலீஸ் தரப்பிலிருந்து தகவல்கள் கசிந்தன.
இருப்பினும் மறுபக்கம் ராம்குமாருக்கு ஆதரவான குரல்களும் இருந்தபடியே உள்ளன. அவரது வக்கீல்களும் அவருக்காக தீவிரமாக களம் இறங்கியுள்ளனர். இந்த வழக்கில் போலீஸார் முக்கிய விசாரணைகளை முடித்து விட்டனர்.

ஆதாரங்கள் திரட்டல்
வழக்குக்குத் தேவையான அனைத்து ஆதராங்களையும் போலீஸார் திரட்டி விட்டதாக கூறப்படுகிறது. கொலை செய்யப் பயன்படுத்தப்பட்ட அரிவாள் உள்ளிட்ட அனைத்தும் சேகரிக்கப்பட்டு விட்டதாம்.

தடயவியல் சோதனை
ஆனால் அதை விட முக்கியமான தடயவியல் சோதனை முடிவுகளைத்தான் தற்போது போலீஸார் எதிர்பார்த்துள்ளனர். இது மட்டுமே ராம்குமாருக்கு எதிரான வழக்கில் முக்கியமானதாக அமையும் என்பதால் இதைத்தான் போலீஸார் எதிர்பார்த்துக் காத்துள்ளனர்.

சிசிடிவி படங்கள்
முக்கியமாக போலீஸார் ஆரம்பத்தில் வெளியிட்ட சிசிடிவி படங்களையும், ராம்குமாரின் படத்தையும் ஒப்பிட்டு அதில் கிடைக்கும் முடிவு முக்கியமாக எதிர்பார்க்கப்படுகிறது. அது ஒத்துப் போனால் மட்டுமே வழக்கு நிற்கும். இல்லாவிட்டால் அவ்வளவுதான்.

ரத்த மாதிரிகள்
அதேபோல ரத்த மாதிரிகளும் சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. ராம்குமாரின் சட்டையில் இருந்த ரத்தக் கறை, அரிவாளில் படிந்த ரத்தக்கறை, சுவாதியின் ரத்தம் ஆகியவை ஒத்துப் போகிறதா என்ற சோதனை முக்கியமானது.

முடிவு வந்தால் தெரியும்
இந்த முடிவுகளை எதிர்பார்த்துள்ளோம். அதில் ராம்குமாருக்கு எதிரான எங்களது நிலைப்பாடு உறுதியாகும் என்று போலீஸார் உறுதிபட நம்பிக்கையுடன் கூறுகின்றனர்.

ராம்குமார் மட்டுமே
மேலும் ராம்குமாருக்கு மட்டுமே இதில் தொடர்பு உள்ளது. அவர் மட்டுமே திட்டமிட்டு செயல்பட்டுள்ளதாகவும் போலீஸ் தரப்பில் சொல்கிறார்கள். வேறு யாருக்கும் தொடர்பு இல்லை என்றும் போலீஸ் தரப்பில் பேசப்படுகிறது.
-
தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்! முடிவுக்கு வரும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை -
தென்காசியில் ஷாக்.. கண்ணில் தென்பட்டவர்கள் அனைவருக்கும் அரிவாள் வெட்டு.. மர்ம கும்பல் வெறிச்செயல்! -
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
டெல்லி ரிட்டர்ன்.. விஜய் செய்யும் முதல் வேலை.. சென்னையில் நாளை சம்பவம்.. சிங்கப் பெண் அதிரடிப்படை! -
நெல்லை கவின் ஆணவக்கொலை வழக்கில் திடீர் திருப்பம்.. கைதானார் சுர்ஜித்தின் தாய் எஸ்.ஐ கிருஷ்ணகுமாரி -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications