ராம்குமார் உடல் இன்று பிரேத பரிசோதனை... ராயப்பேட்டை மருத்துவமனை அருகில் பதற்றம்!
சென்னை: மருத்துவக் குழு மற்றும் நீதிபதி முன்னிலையில் இன்று ராம்குமாரின் உடல் கூறு பரிசோதனை ராயப்பேட்டை மருத்தவமனையில் நடைபெறுகிறது.
சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ராம்குமார் மின்கம்பியை வாயால் கடித்து தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரித்தனர். இதனையடுத்து ராம்குமாரின் உடல் சென்னை ராயப்பேட்டை மருத்துவமனை உடற்கூறு பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அவரது மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் இருப்பதாக அரசியல் கட்சித் தலைவர்களும் பெற்றோர்களும் ஆட்சேபம் தெரிவித்தனர். மேலும் ராயப்பேட்டை மருத்துவமனை முன்பு ஆர்ப்பாட்டங்களையும் செய்தனர்.
இதனிடையே , ராம்குமாரின் உடற்கூறு பரிசோதனையை நிறுத்தி வைக்க வேண்டும் என்று அவரது வழக்கறிஞர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மருத்துவ குழு முன்னிலையில் உடற்கூறு பரிசோதனை செய்ய உத்தரவிட்டார். இதனையடுத்து நேற்று நடைபெறுவதாக இருந்த ராம்குமாரின் உடற்கூறு பரிசோதனை இன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
அதன்படி இன்று 4 மருத்துவர்கள் கொண்ட குழு மற்றும் நீதிபதி தமிழ்செல்வி முன்னிலையில் உடற்கூறு பரிசோதனை செய்யப்பட உள்ளது. இந்த உடற்கூறு பரிசோதனை முழுவதும் வீடியோ பதிவு செய்யப்பட உள்ளது.
இதனையடுத்து ராயப்பேட்டை மருத்துவமனை அருகில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications